குடியுரிமை திருத்த சட்டம்: குஷ்பு, பிரியங்கா சோப்ரா எதிர்ப்பு


குடியுரிமை திருத்த சட்டம்: குஷ்பு, பிரியங்கா சோப்ரா எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 Dec 2019 11:00 PM GMT (Updated: 19 Dec 2019 5:43 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தை சித்தார்த், மம்முட்டி, பிருதிவிராஜ், அமலாபால், பார்வதி உள்ளிட்ட தென்னிந்திய நடிகர், நடிகைகள் ஏற்கனவே கண்டித்துள்ளனர்.

தற்போது மீண்டும் டுவிட்டருக்கு திரும்பி உள்ள நடிகை குஷ்பு இது குறித்து கூறியிருப்பதாவது:-

“குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவை சிதைக்கக் கூடியது. நமது எதிர்காலமும் பலமுமாக இருப்பது மாணவர்கள். அவர்களுக்கு துன்பம் ஏற்பட்டு உள்ளது. அதிகாரம் படைத்தவர்களால் தேசத்தின் எதிர்காலம் சிதைவதை பொறுக்க முடியாது. அனைவரும் மாணவர்களுக்கு துணையாக இருப்போம்.

மோடியும், அமித்ஷாவும் நாட்டின் அமைதிக்கு கேடு செய்கின்றனர். அகதிகள் என்று யாரை அழைக்கிறீர்களோ அவர்கள்தான் உங்களுக்கு ஓட்டு போட்டனர். நாடு மத சார்பின்மையால் இயங்குகிறதே தவிர மதத்தினால் அல்ல. இந்த பிரச்சினையில் குரல் கொடுத்துள்ள கமல்ஹாசனை வாழ்த்துகிறேன். இந்தியா ஒற்றுமையால் உருவானது. அமைதியும் அகிம்சையும் நிறைந்த நாடு. இந்த ஜனநாயக தேசத்தை சிதைக்க வேண்டாம்.

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

இதைப்போல் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியதாவது:-

“ஒவ்வொரு குழந்தையின் கனவாக இருப்பது கல்வி. அவர்கள் சுயமாக சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே கல்வி கற்பிக்கப்படுகிறது. ஜனநாயகத்தில் அமைதியான முறையில் குரல் எழுப்பலாம். அப்படி குரல் எழுப்புபவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது தவறானது. அவர்கள் குரல் எழுப்ப கற்று கொடுக்க வேண்டும். ஒவ்வொருவர் குரலும் இந்தியாவின் மாற்றத்துக்கான குரலாக இருக்கிறது.”

இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

Next Story