புது நடிகர்கள் படங்களுக்கு வரவேற்பு; டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்


புது நடிகர்கள் படங்களுக்கு வரவேற்பு; டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்
x
தினத்தந்தி 19 Dec 2019 11:30 PM GMT (Updated: 2019-12-19T23:26:43+05:30)

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனது ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ‘அல்லி’ என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார். இந்த படத்தை சணல்குமார் சசிதரன் இயக்க நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ், அகில் விஸ்வநாத் ஆகியோர் நடித்துள்ளனர்

‘அல்லி’  படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது:-

“நான் குறும்படம் எடுத்துத்தான் சினிமாவுக்கு வந்தேன். முதன் முதலாக படம் இயக்க அலைந்த போது சரியாக வாய்ப்பு அமையவில்லை. ‘ஜிகர்தண்டா’ கதையை வைத்துத்தான் முதலில் தயாரிப்பாளரை தேடினேன். கிடைக்கவில்லை. அதன்பிறகு சுயமாக ஒரு படம் எடுக்கலாம் என்று ‘பீட்சா’ படத்தை இயக்கினேன்.

புது கதைகள், புது நடிகர்கள், நடிகைகள், புது இயக்குனர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றுதான் பட நிறுவனம் தொடங்கினேன். அல்லி படம் எனது மனதை மிகவும் பாதித்தது. இந்த மாதிரி படங்களை தியேட்டருக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே வெளியிடுகிறேன்.

நகர வாழ்க்கையை அறியாத பெண்ணும் அவளைக் காதலிக்கிற பையனும் ஒரு நாள் வெளியே கிளம்புகிறார்கள். காதலனின் முதலாளியும் உடன் செல்கிறார். அப்புறம் என்ன நடக்கிறது என்பதுதான் அல்லி படத்தின் கதை.

பெரிய கதாநாயகர்கள் படங்களைபோல், புதிய நடிகர்கள் இயக்குனர்கள் படங்களையும் ரசிகர்கள் வரவேற்கிறார்கள். அப்படித்தான் நானும் வந்தேன், அல்லி படத்தையும் வரவேற்பார்கள்.”

இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.

Next Story