சினிமா செய்திகள்

நடிகை அஞ்சலியுடன் திருமணமா? நடிகர் ஜெய் விளக்கம் + "||" + Married to actress Anjali? Actor Jay's description

நடிகை அஞ்சலியுடன் திருமணமா? நடிகர் ஜெய் விளக்கம்

நடிகை அஞ்சலியுடன் திருமணமா? நடிகர் ஜெய் விளக்கம்
நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜோடியாக நடித்த காலத்தில் இருந்தே இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் உள்ளன.
நடிகர் ஜெய்யும், அஞ்சலியும்  ஜோடியாக வெளியில் சுற்றுவது, சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிடுவது, மகளிர் மட்டும் படத்துக்காக நடந்த தோசை சுடும் போட்டியில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது என்று காதலை உறுதிப்படுத்துவதுபோல் நடந்து கொண்டனர்.

ஜெய்யும், அஞ்சலியும் கொடைக்கானல் படப்பிடிப்பில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறி விட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்த புகாரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் பேசப்பட்டது.

ஜெய் ஒரு பேட்டியில் “அஞ்சலிக்கும் எனக்கும் நல்ல புரிதல் உள்ளது. எனக்கு அஞ்சலியையும் அஞ்சலிக்கு என்னையும் பிடித்து இருக்கிறது” என்றார். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள கேப்மாரி படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள நிலையில், காதல் கிசுகிசுக்களுக்கு ஜெய் மீண்டும் விளக்கம் அளித்து கூறியதாவது:-

“என்னையும் அஞ்சலியையும் இணைத்து அடிக்கடி செய்திகள் வருகின்றன. திருமணம் என்பது மகிழ்ச்சியான விஷயம். எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அதை மறைக்க மாட்டேன். அஞ்சலியை நான் காதலிக்கவில்லை. அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை.”

இவ்வாறு ஜெய் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சோதனையான காலகட்டத்தில் தி.மு.க.வை கட்டிக்காத்தவர் அன்பழகன் மறைவுக்கு நாராயணசாமி இரங்கல்
சோதனையான காலகட்டத்தில் தி.மு.க.வை கட்டிக்காத்தவர் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
2. பேராசிரியர் அன்பழகன் படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி
பேராசிரியர் அன்பழகன் மறைவையொட்டி அவரது படத்துக்கு தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
3. குமரி மாவட்டத்தில் அன்பழகன் உருவ படத்துக்கு மாலை அணிவித்து தி.மு.க.வினர் அஞ்சலி
குமரி மாவட்டத்தில் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்துக்கு மாலை அணிவித்து தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
4. மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளருக்கு அஞ்சலி மாவட்டத்தில்
மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளருக்கு சேலம் மாவட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
5. நடிகர் ஜெய்யுடன் காதல் தோல்வியா? -அஞ்சலி விளக்கம்
நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலித்ததாகவும் தற்போது காதலில் முறிவு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் திரையுலகினர் பேசி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...