சினிமாவில் நடிக்க தடை: ‘வெப்’ தொடருக்கு மாறும் வடிவேல்?


சினிமாவில் நடிக்க தடை: ‘வெப்’ தொடருக்கு மாறும் வடிவேல்?
x
தினத்தந்தி 20 Dec 2019 11:45 PM GMT (Updated: 2019-12-20T23:37:52+05:30)

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்கினர். சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனாலும் கமலின் அரசியல் பணிகள், இந்தியன்-2 பட வேலைகள் போன்றவற்றால் தலைவன் இருக்கின்றான் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ‘வெப்’ தொடர்களில் நடிக்க வடிவேலுக்கு அழைப்புகள் வருகின்றன. அதை ஏற்று ‘வெப்’ தொடருக்கு மாற வடிவேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே முன்னணி நடிகர் நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளனர். ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால் நடித்த குயின் வெப் தொடர் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. பரத், பாபி சிம்ஹா, பிரசன்னா, மீனா, காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நித்யாமேனன், பிரியாமணி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் வெப் தொடர்களில் நடிக்கின்றனர்.

Next Story