ரஜினி படத்தில் ஸ்ரீமன், விஸ்வாந்த்


ரஜினி படத்தில் ஸ்ரீமன், விஸ்வாந்த்
x
தினத்தந்தி 22 Dec 2019 11:09 PM GMT (Updated: 2019-12-23T04:39:25+05:30)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பை தொடங்கி விட்டார் நடிகர் ரஜினிகாந்த். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினிகாந்துடன் நடித்து வருகிறார்கள். இதில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவும், குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஸ்ரீமன் மற்றும் நடிகர் விஸ்வாந்த் ஆகியோரும் ரஜினிகாந்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தில் ஸ்ரீமன் நடித்துள்ளார். மேலும், ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்துடன் விஸ்வாந்த் நடித்திருந்தார். இருவருமே மீண்டும் ரஜினிகாந்துடன் நடிக்க உள்ளது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Next Story