சினிமா செய்திகள்

இணையதளத்தில் வெளியான தம்பி, ஹீரோ - படக்குழுவினர் அதிர்ச்சி + "||" + Published on the website The brother, the hero Shocked by the crew

இணையதளத்தில் வெளியான தம்பி, ஹீரோ - படக்குழுவினர் அதிர்ச்சி

இணையதளத்தில் வெளியான தம்பி, ஹீரோ - படக்குழுவினர் அதிர்ச்சி
திருட்டு வி.சி.டி.யை தொடர்ந்து இணையதளத்தில் புதிய படங்கள் உடனுக்குடன் வெளியாவது தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலைவலியாக உள்ளது.
இணையதளத்தில் வெளியான தம்பி, ஹீரோ  - இதை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுத்தது.  தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தனர். கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டன.

ஆனாலும் பலன் இல்லை. முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால் உள்ளிட்ட நடிகர்கள் படங்களும் திரைக்கு வந்த உடனேயே இணையதளத்திலும் வெளிவந்தன. இதேபோல் தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களையும் தியேட்டருக்கு வந்த உடனேயே சுடச்சுட இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டனர். இதை கட்டுப்படுத்த முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிக்கின்றனர்.


இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படமும், நடிகர் கார்த்தி நடித்த தம்பி படமும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை பலரும் பதிவிறக்கம் செய்து பார்க்கின்றனர். இதனால் வசூல் பாதிக்கும் என்ற கவலையில் படக்குழுவினர் உள்ளனர். இதேபோல் வெளிவரும் புதிய படங்களை இணையதளத்தில் வெளியிடக்கூடாது என்று கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்தும் அதையும் மீறி இணையதளத்தில் வருவது தொடர் கதையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நெமிலி அருகே பரிதாபம்: அக்காள், தம்பி குளத்தில் மூழ்கி சாவு - விளையாடியபோது தவறி விழுந்தனர்
நெமிலி அருகே அக்காள், தம்பி இருவர் விளையாடியபோது குளத்தில் தவறிவிழுந்து பலியானார்கள்.
2. முகமூடி அணிந்து வில்லன்களை பந்தாடும் சூப்பர் ஹீரோ சாகசங்கள் படம் ஹீரோ - விமர்சனம்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஹீரோ’ படத்தின் முன்னோட்டம்.
3. மின்இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரிடம், நிருபர்கள் என்று மிரட்டிய அண்ணன்-தம்பி கைது
தேனியில் மின்இணைப்பை துண்டிக்கச் சென்ற ஊழியரிடம் தங்களை நிருபர்கள் என்று கூறி மிரட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. தூத்துக்குடியில் அண்ணன்–தம்பிக்கு கத்திக்குத்து
தூத்துக்குடியில் அண்ணன்–தம்பியை கத்தியால் குத்திய நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–
5. இணையதளத்தில் வெளியான விஷாலின் ‘ஆக்‌ஷன்’
ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் திரைக்கு வந்த உடனேயே திருட்டு வி.சி.டி. மற்றும் இணைய தளங்களில் வெளியாகின்றன.