விக்ரம் புதிய படத்தின் பெயர் ‘கோப்ரா?’


விக்ரம் புதிய படத்தின் பெயர் ‘கோப்ரா?’
x
தினத்தந்தி 24 Dec 2019 10:58 PM GMT (Updated: 24 Dec 2019 10:58 PM GMT)

விக்ரம் புதிய படத்தின் பெயர் ‘கோப்ரா’ என்று வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.


விக்ரம் நடிப்பில் கடந்த வருடம் ஸ்கெட்ச், சாமி-2 படங்களும் கடந்த ஜூலை மாதம் கடாரம் கொண்டான் படமும் திரைக்கு வந்தன. கடாரம் கொண்டான் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருந்தார். தொடர்ந்து கமலின் கனவு படமான மருதநாயகம் படத்தில் விக்ரம் நடிப்பார் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கி பிரபலமான அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இது அவருக்கு 58-வது படம். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி வருகிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் விக்ரம் பல தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்த வருடம் கோடையில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அமர் என்ற பெயரை வைத்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர்.

இந்த நிலையில் படத்துக்கு கோப்ரா என்ற பெயரை தேர்வு செய்து இருப்பதாக மீண்டும் வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. பெயரை புத்தாண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


Next Story