நடிகர் ரஜினிகாந்துடன், பேட்மிண்டன் வீராங்கனை சிந்து சந்திப்பு


நடிகர் ரஜினிகாந்துடன், பேட்மிண்டன் வீராங்கனை சிந்து சந்திப்பு
x
தினத்தந்தி 24 Dec 2019 11:03 PM GMT (Updated: 2019-12-25T04:33:24+05:30)

நடிகர் ரஜினிகாந்தை, பேட்மிண்டன் வீராங்கனை சிந்து சந்தித்தார்.

ஐதராபாத்,

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த போது, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அப்போது தான் சிந்துவின் ரசிகனாகி விட்டேன் என்று கூறியிருந்தார். ரஜினிகாந்தின் பாராட்டால் நெகிழ்ந்து போன சிந்து அவரை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக கூறியிருந்தார். இந்தநிலையில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் (168-வது படம்) படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இதை கேள்விப்பட்டு அங்கு சென்ற பி.வி.சிந்து, ரஜினிகாந்தை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். அப்போது உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சிந்துவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிந்து வெளியிட்டு, ‘வாவ்....மகிழ்ச்சியான தருணம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.


Next Story