சினிமா செய்திகள்

உண்மையை கேட்க அவர் விரும்பவில்லை; நிர்மலா சீதாராமன் என்னை ப்ளாக் செய்துவிட்டார் - நடிகை குஷ்பு + "||" + Nirmala Sitharaman ji has blocked me-Khushbu

உண்மையை கேட்க அவர் விரும்பவில்லை; நிர்மலா சீதாராமன் என்னை ப்ளாக் செய்துவிட்டார் - நடிகை குஷ்பு

உண்மையை கேட்க அவர் விரும்பவில்லை; நிர்மலா சீதாராமன் என்னை ப்ளாக் செய்துவிட்டார் - நடிகை குஷ்பு
நிர்மலா சீதாராமன் என்னை ட்விட்டரில் ப்ளாக் செய்துவிட்டார். அவர் உண்மையை கேட்க விரும்பவில்லை என நடிகை குஷ்பு கூறி உள்ளார்.
சென்னை,

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னை ட்விட்டரில் ப்ளாக் செய்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நடிகை குஷ்பூ, மத்திய அரசு மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், அவர் சமீபத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ”நிர்மலா சீதாராமன் என்னை ப்ளாக் செய்துவிட்டார். அவர் உண்மையை கேட்க விரும்பவில்லை. அவர் நரேந்திர மோடி, அமித் ஷா போன்று பொய்யை மட்டும் சுவாசித்து, உண்டு, வாழும் நபர்களுடன் வாழ்வதால் அவரை குற்றம் சுமத்த ஒன்றும் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பொருளாதார மந்த நிலை குறித்து காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி விவாதித்து வந்த நிலையில் செப்டம்பர் மாதமே குஷ்புவை, நிர்மலா சீதாராமன் ப்ளாக் செய்துள்ளார். தற்போது அதனை மீண்டும் நினைவுப்படுத்தும்படியாக குஷ்பு ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...? நடிகர் நெப்போலியன்
இளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...? என நடிகர் நெப்போலியன பேட்டி அளித்து உள்ளார்.
2. மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன்- திருமணம் குறித்து வனிதா விஜயகுமார்
மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன் என திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் கூறி உள்ளார்.
3. விமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்- நடிகை ராதிகா ஆப்தே
விமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் குறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறி உள்ளார்.
4. நயன்தாரவுக்கு கொரோனா பாதிப்பா...? விக்னேஷ் சிவன் கோபம்
கொரோனா வதந்தி பரப்பியவர்களுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
5. மிகப்பெரிய வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் பட இயக்குனர் மரணம்
'அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.