வெப் தொடருக்கு மாறிய சத்யராஜ், சீதா


வெப் தொடருக்கு மாறிய சத்யராஜ், சீதா
x
தினத்தந்தி 26 Dec 2019 9:30 PM GMT (Updated: 26 Dec 2019 9:25 PM GMT)

வெப் தொடர்களுக்கு வரவேற்பு உள்ளதால் முன்னணி நடிகர்-நடிகைகள் பலர் இணையதள தொடர்களில் நடிக்க வந்துள்ளனர்.

ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான குயின் வெப் தொடரில் ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.

காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பிரியாமணி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா, மீனா ஆகியோர் ஏற்கனவே வெப் தொடர்களில் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு நடிகர் நடிகைகளும் வெப் தொடர்களில் நடிக்கின்றனர்.

நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. இதனால் வடிவேலுவுக்கும் வெப் தொடர்களில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாகவும் விரைவில் வெப் தொடரில் அவர் நடிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் முதல் முறையாக சத்யராஜ், சீதா, சுகன்யா ஆகியோரும் புதிய வெப் தொடர் ஒன்றில் இணைந்து நடிக்கின்றனர். இந்த தொடரை தாமிரா இயக்குகிறார். இவர் ஏற்கனவே பாலசந்தர், பாரதிராஜா நடித்த ரெட்டை சுழி, சமுத்திரக்கனி நடித்த ஆண்தேவதை ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். காதல், நகைச்சுவை, குடும்ப கதையம்சத்தில் இந்த வெப் தொடர் தயாராகிறது. படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது.

Next Story