பவன் கல்யாணுக்கு எதிராக மீண்டும் ஸ்ரீரெட்டி, ‘மீ டூ’ புகார்


பவன் கல்யாணுக்கு எதிராக மீண்டும் ஸ்ரீரெட்டி, ‘மீ டூ’ புகார்
x
தினத்தந்தி 1 Jan 2020 3:00 AM IST (Updated: 31 Dec 2019 11:52 PM IST)
t-max-icont-min-icon

பவன் கல்யாணுக்கு எதிராக மீண்டும் ஸ்ரீரெட்டி, ‘மீ டூ’ புகார். பிரபல தெலுங்கு நடிகரும் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாணை ‘மீ டூ’வில் சிக்க வைத்துள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லியும் அரை நிர்வாண போராட்டம் நடத்தியும் இந்திய திரையுலகையே அதிர வைத்தார். நடிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் இதில் சிக்கினர்.

தற்போது ஸ்ரீரெட்டி சென்னையில் குடியேறி உள்ளார். சில நாட்களாக அமைதியாக இருந்த அவர் இப்போது மீண்டும் பிரபல தெலுங்கு நடிகரும் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாணை ‘மீ டூ’வில் சிக்க வைத்துள்ளார். ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாவது:-

“பெண்களை மதிக்க தெரியாதவர் பவன் கல்யாண். பல இளம் பெண்களை மோசம் செய்து கர்ப்பமாக்கி உள்ளார். வாழ்க்கையில் அவரால் ஒருபோதும் உயர முடியாது. அவரது ரசிகர்களுக்கு பயந்து நான் சென்னைக்கு ஓடி விட்டதாக புரளி கிளம்பி உள்ளது. எனக்கு எந்த பயமும் இல்லை.

ஐதராபாத்தில் ஏற்கனவே வசித்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்கிறேன். அவரால் பாதிப்புக்கு உள்ளான 5 பெண்கள் புகார் அளிக்க தயாராகி வருகிறார்கள். இதுபோல் மேலும் சிலரும் வருவார்கள். ஆந்திர முதல் அமைச்சராகி விட வேண்டும் என்று அவருக்கு கனவு உள்ளது. அது ஒருபோதும் நடக்காது. பஞ்சாயத்து தலைவராக கூட அவரால் வர முடியாது.”

இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். இந்த புகார் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story