“எனக்கு பணம் முக்கியம் இல்லை” -நடிகை ராஷ்மிகா
தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தற்போது சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் 2 படங்களும் கன்னடத்தில் ஒரு படமும் கைவசம் வைத்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“வெற்றி எப்போதும் உற்சாகத்தை கொடுக்கும். அதற்காக வெற்றி அடைந்த படங்களை ஒரு மாதிரியும் தோல்வி அடைந்த படங்களை ஒரு மாதிரியும் என்னால் பார்க்க முடியாது. எனக்கு இரண்டுமே சமம்தான். வெற்றி அடைந்த படங்களால் இன்னும் சில பட வாய்ப்புகள் புதிதாக வரலாம். இன்னும் நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் எனது பார்வையில் பணமும் இன்னொரு படவாய்ப்பும் கிடைப்பது முக்கியம் இல்லை. அந்த படத்துக்காக நாம் எவ்வளவு உழைத்தோம். அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்பதுதான் முக்கியம். சரியான பலன் வரவில்லை என்றால் நமது உழைப்பு வீணாகி விட்டதே என்ற வருத்தம் இருக்கும்.
ஆனாலும் அதில் கற்றுகொண்ட விஷயங்களை நினைவுபடுத்தி மனதை தேற்றிக்கொள்ள வேண்டும். சம்பளத்தில் நடிகர்-நடிகைகளுக்கு வித்தியாசம் இருக்கலாம். ஆனால் பலன்கள் கதாநாயகர்கள் மீது எவ்வளவு தாக்கம் ஏற்படுத்துகிறதோ அதே அளவு கதாநாயகிகள் மீதும் ஏற்படுத்தும். சில நேரங்களில் கதாநாயகர்களை மட்டுமே பாதிக்கும்படியும் இருக்கும்.
இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.
Related Tags :
Next Story