சினிமா செய்திகள்

தர்பார் வெளியாகும் திரையரங்கின் முன்பு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ அனுமதி கேட்கும் ரசிகர் + "||" + In front of the theater where the Durbar is released Flower from the helicopter   The fan who asks for permission

தர்பார் வெளியாகும் திரையரங்கின் முன்பு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ அனுமதி கேட்கும் ரசிகர்

தர்பார் வெளியாகும் திரையரங்கின் முன்பு ஹெலிகாப்டரிலிருந்து  மலர் தூவ அனுமதி கேட்கும் ரசிகர்
ரஜினிகாந்தின் தர்பார் வெளியாகும் திரையரங்கின் முன்பு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ அனுமதி கேட்டு போலீசாரிடம் ஒரு ரசிகர் மனு அளித்துள்ளார்.
சேலம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். ரஜினியின் 167-வது படமான தர்பாரில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள  நிலையில் வரும் 9-ம் தேதி தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது.

சேலம் மாவட்டத்தின் மெய்யனூர் கிராமத்தில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ். திரையரங்கில் தர்பார் படம் வெளியாகும் தினத்தன்று, ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ கனகராஜ் என்பவர் அனுமதி கோரியுள்ளார். பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் ஹெலிகாப்டரிலிருந்து திரையரங்கின் முன்பு மலர் தூவ  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, குறிப்பிட்ட இடத்தை மேற்பார்வை செய்து விரிவான அறிக்கை அனுப்புமாறு சேலம் வருவாய் கோட்டாட்சியர், சேலம் மேற்கு வட்டாட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு
தர்பார் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. நடிகர் ரஜினிகாந்தை நீங்கள் யார்? என கேட்டவர் பைக் திருட்டு வழக்கில் கைது
நடிகர் ரஜினிகாந்தை நீங்கள் யார்? என கேட்டவர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
3. 'ரஜினி மலை, அஜித் தலை' அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ரைமிங்
'ரஜினி மலை, அஜித் தலை' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரைமிங்காக கூறி உள்ளார்.
4. ரஜினிகாந்த் படத்தின் பெயர், ‘அண்ணாத்த?’
ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் அவருடைய 168-வது படத்துக்கு, ‘அண்ணாத்த’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.
5. ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணியா? - டாக்டர் ராமதாஸ் பதில்
ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்பதற்கு டாக்டர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.