சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, அம்மன் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா, அதற்காக என்னென்ன பயிற்சிகளை எடுத்து வருகிறார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிப்பதற்காக, பல பழைய பக்தி படங்களை நயன்தாரா பார்த்து வருகிறாராம். அதோடு இந்த படத்தில் நடித்து முடிக்கும் வரை, அவர் அசைவம் சாப்பிடுவதில்லை என்று உறுதி எடுத்து இருக்கிறார்!

***

செல்லப்பிராணிகள் மீது திரிஷா இவ்வளவு பற்றும் பாசமும் வைத்து இருக்கிறாரே...அதன் ரகசியம் என்ன? (எம்.குரு தவமணி, சோழவந்தான்)

மனிதர்களை விட செல்லப்பிராணிகள் உண்மையாகவும், விசுவாசமாகவும் உள்ளன என்கிறார், திரிஷா! அவருடைய பற்றுக்கும், பாசத்துக்கும் காரணம் இதுதான்!

***

குருவியாரே, மற்ற கதாநாயகிகளில் இருந்து சமந்தா எப்படி வேறுபடுகிறார்? (கே.ரவீந்திரன், கோவை)

நிறத்திலும், குணத்திலும் மற்ற கதாநாயகிகளிடம் இருந்து சமந்தா முற்றிலும் மாறானவர். மிக மிக மென்மையானவர்!

***

‘‘அஞ்சலியுடன் திருமணம் இல்லை’’ என்று ஜெய் அறிவித்து இருக்கிறாரே...? (சி.பாண்டியராஜன், குன்னூர்)

இப்படி சொன்ன பல நடிகர்கள், அடுத்த நாளே மனம் கவர்ந்த நடிகையுடன் மணமேடையில் அமர்ந்து இருக்கிறார்கள்! சில கதாநாயகர்கள், ‘‘இல்லை’’ என்று சொன்னால், அதற்கு ‘‘ஆமாம்’’ என்று அர்த்தம்!

***

குருவியாரே, குடும்ப பின்னணியை கொண்ட கதைகளுக்கு சசிகுமார் கச்சிதமாக பொருந்துகிறாரே...எப்படி? (ஜி.ராம்குமார், போரூர்)

சசிகுமாருக்கு கூட்டு குடும்பமாக வாழ்ந்த அனுபவம் இருக்கிறது. அதனால்தான் குடும்ப கதைகளுக்கு அவர் கச்சிதமாக பொருந்துகிறாராம்!

***

மம்முட்டி, மோகன்லால் ஆகிய 2 பெரிய மலையாள நாயகர்கள் தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்கள். இரண்டு பேரில், மலையாள வாசனை இல்லாமல் தமிழை சரியாக பேசுபவர் யார்? (எஸ்.பி.தமிழரசன், பட்டுக்கோட்டை)

மோகன்லாலை விட, மம்முட்டி தமிழ் வார்த்தைகளை சரியாக உச்சரிக்கிறார். சரளமாக பேசுகிறார்!

***

குருவியாரே, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் எது? (தமீம் அன்சாரி, தூத்துக்குடி)

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய படங்களில், கை கொடுத்த தெய்வம், பணமா பாசமா, செல்வம், குலமா குணமா ஆகிய படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடின!

***

கத்தி பேசுவதும், அங்கம் குறைந்தவர்களை அடைமொழி வைத்து பேசுவதும் நகைச்சுவையா? (வே.தேவஜோதி, மதுரை)

அது, நகைச்சுவை அல்ல...கிண்டல்!

***

குருவியாரே, சமீபகாலமாக தனுஷ் தாடி வைத்து நடிப்பதை வழக்கமாக்கி கொண்டது ஏன்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

தாடி வைத்துக் கொள்வது, இன்றைய இளைஞர்களின் ‘லேட்டஸ்ட்’ நாகரிகமாகி விட்டது. அதோடு முதிர்ச்சியான வேடங்களில் நடிக்கும்போது, தாடி அவசியமாகி விடுகிறது!

***

மோகன் என்று ஒரு நடிகர் இருந்தாரே...அவர் என்ன ஆனார்? (ஆர்.ஜெகதீஷ், கோபிச்செட்டிப்பாளையம்)

மோகன் நடிப்பதற்கு தயார். பட வாய்ப்புகள் அவரை தேடி வராததால், குடிநீர் வியாபாரம் செய்து வருவதாக கேள்வி!

***

குருவியாரே, 88 வயதான சவுகார்ஜானகி, ‘தம்பி’ படத்தில் நடித்து இருப்பது எதை காட்டுகிறது? (இரா.மோகன், திருச்செங்கோடு)

அவருடைய மன உறுதியை காட்டுகிறது. இன்னும் கனமான வேடங்களில் கூட, அவர் நடிக்க தயாராக இருக்கிறாராம்!

***

கவர்ச்சி நடனத்துக்கு அதிக சம்பளம் வாங்கிய நடிகை யார்? (கே.அருண்குமார், கடலூர்)

மறைந்த ‘சிலுக்கு’ சுமிதா! அவர் ஒரு பாடலுக்கு நடனமாட சில லட்சங்கள் சம்பளமாக வாங்கி வந்தார்!

***

குருவியாரே, ‘சிறுத்தை’ சிவா இயக்கி வரும் புதிய படம், ரஜினிக்கு எத்தனையாவது படம்? அடுத்த படம் பற்றி ‘தலைவர்’ முடிவு செய்து விட்டாரா? (என்.மல்லிகா, திருவண்ணாமலை)

168–வது படம். அடுத்த படம் பற்றி ரஜினிகாந்த் முடிவு செய்யவில்லை. அதற்காக இரண்டு, மூன்று டைரக்டர்கள், ‘கியூ’வில் நிற்கிறார்கள்!

***

இசையமைப்பாளர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு இன்னொரு இசையமைப்பாளர் இசையமைத்தால்...அந்த இசை எப்படியிருக்கும்? (ஏ.மதன்குமார், குடியாத்தம்)

‘தமிழரசன்’ படம் வெளிவரும்போது தெரிந்து விடும். அந்த படத்தின் கதாநாயகன், விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர், இளையராஜா!

***

குருவியாரே, ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு எங்கே நடக்கிறது, இப்போது யார்–யார் நடித்து வருகிறார்கள்? (எம்.வெங்கட், அருப்புக்கோட்டை)

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்கிறது. அந்த படத்தில் இப்போது சரத்குமார், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்து வருகிறார்கள்!

***

கே.ஆர்.விஜயா, விளம்பர படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார்? (எஸ்.பிரபு, குளித்தலை)

நியாயமான சம்பளத்தை வாங்கியிருக்கிறார்!

***

குருவியாரே, விஜய் நடிக்கும் புதிய படத்தில் அரசியல் இருக்கிறதா? (ஸ்ரீதர், மார்த்தாண்டம்)

விஜய் நடிக்கும் புதிய படத்தில், அரசியல் தலைவர்தான் வில்லன் என்று பேசப்படுகிறது!

***

‘இதயக்கனி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை யார்? அவர் அந்த படத்துக்கு முன்பு எந்த படத்தில் நடித்தார்? (கே.ராஜீவ், பண்ருட்டி)

‘இதயக்கனி’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தவர், இந்தி நடிகை ராதாசலுஜா. அந்த படத்துக்கு முன்பு அவர், ‘தோரஹா’ என்ற இந்தி படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்!

***

குருவியாரே, கவுண்டமணியின் சொந்த ஊர் எது? இதுவரை அவர் எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? (மோகன், காமநாயக்கன் பாளையம்)

கவுண்டமணியின் சொந்த ஊர், உடுமலைப்பேட்டை அருகில் உள்ள நல்ல குண்டபுரம். அவர் இதுவரை 300–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்!

***

யோகி பாபுவுக்கு இத்தனை யோகம் எப்படி–எதனால் வந்தது? (வி.அஸ்வின், காஞ்சீபுரம்)

‘‘ஆள் இல்லாத ஊரில் இழுப்பைப்பூ சர்க்கரை’’ என்று ஒரு பழமொழி உண்டு. அது 100 சதவீதம் யோகி பாபுவுக்கு பொருந்தி இருக்கிறது!

தொடர்புடைய செய்திகள்

1. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார் குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:- குருவியார், தினத்தந்தி சென்னை-600007.
2. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
3. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
4. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
5. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007