சினிமா செய்திகள்

செல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் - நடிகை நமிதா பிரமோத் வருத்தம் + "||" + Picking up the Selfie Touching the body - Actress Namitha Pramod sad

செல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் - நடிகை நமிதா பிரமோத் வருத்தம்

செல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் - நடிகை நமிதா பிரமோத் வருத்தம்
செல்பி எடுப்பதாக கூறி உடம்பை தொடுகிறார்கள் என நடிகை நமிதா பிரமோத் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பட விழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் நடிகைகளுக்கு ரசிகர்களால் தொல்லைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. பொது இடங்களில் நடிகைகளுடன் செல்பி எடுக்க முண்டியடிக்கும்போது நடிகைகள் ரசிகர்கள் பிடியில் சிக்கி தவித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

இதனால் சில நடிகைகளுக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன. விமான நிலையத்திலும் இதுபோன்ற தொல்லைகளை சந்திக்கிறார்கள். கைகுலுக்கும் போர்வையில் நடிகை சாரா அலிகானை ஒரு ரசிகர் அத்துமீறி முத்தமிட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. தனக்கும் இதுபோன்ற தொல்லைகள் ஏற்பட்டுள்ளதாக நடிகை நமிதா பிரமோத் கூறியுள்ளார். இவர் உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் கூறியதாவது:-

“பொது இடங்களுக்கு செல்லும்போது தொல்லைகளை சந்திக்கிறேன். சிறுவர்களும், பெண்களும் என்னை ஒரு சகோதரிபோல் நினைத்து அன்பாக பழகுகிறார்கள். என்னுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்கின்றனர். இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஆனால் சிலர் ரசிகர்கள் போர்வையில் என் அருகில் வந்து செல்பி எடுப்பதுபோல் உடம்பை தொட்டு தவறாக நடக்கின்றனர்.

தோளிலும் கை வைக்கிறார்கள். இது எனக்கு எரிச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் பர்தா அணிந்து கொண்டு செல்கிறேன்.”

இவ்வாறு நமிதா பிரமோத் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்
சாதி ரீதியாக தான் செய்த விமர்சனத்துக்கு, யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்.
2. மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன் தி.மு.க. வெளிநடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உருக்கம்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்ததாகவும், தி.மு.க. வெளிநடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது என்றும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
3. மானேஜரை நம்பி ஏமாந்தேன்: நடிகை மீரா வாசுதேவன் வருத்தம்
தனது மானேஜரை நம்பி ஏமாந்ததாக, நடிகை மீரா வாசுதேவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
4. “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது” - ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி நாதெள்ளா கருத்து
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என அவர் கூறி உள்ளார்.