படமாகும் உலக கோப்பை கிரிக்கெட் கதை: ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் ஜீவா


படமாகும் உலக கோப்பை கிரிக்கெட் கதை: ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் ஜீவா
x
தினத்தந்தி 13 Jan 2020 1:33 AM GMT (Updated: 13 Jan 2020 1:33 AM GMT)

படமாகும் உலக கோப்பை கிரிக்கெட் கதையில், ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்து வருகிறார்.

 
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார்.

கவாஸ்கர் வேடத்தில் தாஹிர் ராஜ் பாசினும், மொஹிந்தர் அமர்நாத் வேடத்தில் சாகிப் சலீமும், பல்விந்தர் சிங் வேடத்தில் அம்மீ விரிக், கிரிமானி வேடத்தில் சாஹில் கட்டார், வெங்க் சர்க்கார் வேடத்தில் ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி வேடத்தில் தாரிய கர்வா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை கபீர்கான் டைரக்டு செய்கிறார். கபில்தேவ் மகள் அமியா உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தபோது கபில்தேவை ஜீவா சந்தித்து பேசினார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கும் தோற்றத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜீவாவுக்கு பாராட்டுகளும் குவிகின்றன. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் வாழ்க்கை படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றன. அதுபோல் 83 படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.


Next Story