சினிமா செய்திகள்

தனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி + "||" + Dhanush Starrer n: Of 1,500 theaters, Pattas - Interview with Film Producer DG Thiyagarajan

தனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி

தனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி
தனுஷ் நடித்துள்ள படமான ‘பட்டாஸ்’ 1,500 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாக பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பட்டாஸ்.’ இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா, மெஹ்ரின் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். துரை செந்தில்குமார் டைரக்டு செய்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. படம், பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. படத்தை பற்றி தயாரிப்பாளர் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“இந்த படம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த அடி முறை கலையை கருவாக கொண்டது. இது, அந்த காலத்தில் தமிழர்களின் தற்காப்பு கலையாக இருந்தது. இப்போதும் தென் மாவட்டங்களில் பழக்கத்தில் இருக்கிறது. கதைப்படி, ‘பட்டாஸ்’ கதையின் நாயகன் தனுஷ், அடி முறை கலைகளில் தேர்ந்தவராக இருக்கிறார். இதற்காக தனுஷ் 6 மாதங்கள் பயிற்சி பெற்றார். படத்தில் அவருக்கு மனைவியாக வரும் சினேகாவும் இந்த கலையை கற்றுக் கொண்டார்.

தனுஷ் அப்பாவாகவும், மகனாகவும் 2 வேடங்களில் நடித்து இருக்கிறார். படம், பொங்கல் விருந்தாக 1,500 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. எங்கள் பட நிறுவனம் எப்போதுமே குடும்பப்பாங்கான படங்களையே தயாரித்து வருகிறது. ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனமோ இருக்காது. ‘பட்டாஸ்’ படமும் அப்படியே அமைந்து இருக்கிறது.

அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

தமிழ் பட உலகில் இருந்து வரும் மிகப்பெரிய பிரச்சினை, திருட்டு வி.சி.டி. மற்றும் இணையதளங்களில் படங்கள் வருவதுதான். இதை செய்து வரும் தமிழ் ராக்கர்ஸ், நார்வேயில் இருந்து செயல்படுகிறது. பிரச்சினை எழும்போதெல்லாம் தமிழ் ராக்கர்ஸ் தங்களின் இருப்பிடத்தை மாற்றிக் கொள்கிறார்கள். அரசாங்கம் மனது வைத்தால், இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியும்.

ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம், ‘வாட்ஸ் அப்’பில் வந்ததற்கு சத்யஜோதி பிலிம்ஸ் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.”

இவ்வாறு டி.ஜி.தியாகராஜன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘நெற்றிக்கண்-2’ படத்தில், தனுஷ்!
‘அசுரன்’ படத்தின் வெற்றி, நடிகர் தனுசுக்கு ஏராளமான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சம்பாதித்து கொடுத்து இருக்கிறது. அடுத்ததாக அவருடைய மாமனார் ரஜினிகாந்த் நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தனுஷ் ஆர்வமாக இருக்கிறார்.
2. நடிகை தீபிகா படுகோனேவின் படத்தை புறக்கணிப்பது தவறானது - சிவசேனா சொல்கிறது
டெல்லி மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை தீபிகா படுகோனேவின் படத்தை புறக்கணிப்பது தவறானது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
3. மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கதை; தனுசின் புதிய படம் ‘கர்ணன்’
தனுஷ் நடித்து கடந்த வருடம் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வந்தன. இதில் அசுரன் படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. தனுஷ் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன.
4. பதவி உயர்வை வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் 1,000 பேர் ராஜினாமா : மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி
மத்திய பிரதேசத்தில் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் 1,000 பேர் ராஜினாமா செய்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
5. பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 1,500 சுற்றுலா பயணிகள் மீட்பு
சிக்கிமில் பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 1,500 சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.