சினிமா செய்திகள்

ஜோக்கர் படம் 11 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை + "||" + Oscars 2020 predictions and snubs: Joker, The Irishman, Once Upon a Time…in Hollywood

ஜோக்கர் படம் 11 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை

ஜோக்கர் படம் 11 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை
ஜோக்கர் படம் 11 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
கலிபோர்னியா

92-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிப்ரவரி 9 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை, ஹாலிவுட் & ஹைலேண்ட் மையத்தில் உள்ள டால்பி தியேட்டரில்  நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படும். உலகெங்கிலும் உள்ள 225-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் ஆஸ்கார் விருது விழா நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்தாண்டுக்கான பட்டியலில் அதிகபட்சமாக ஜோக்கர் (Joker) திரைப்படம் 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in Hollywood), தி ஐரிஷ் மேன் (The Irishman), 1917 ஆகிய படங்களும் 4 விருதுகளுக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஜோக்கர் (Joker) படத்திற்காக ஜாக்குயின் போனிக்ஸ் (Joaquin Phoenix), Once Upon a Time in Hollywood படத்திற்காக லியோனார்டோ டிகாப்ரியோ (Leonardo DiCaprio) உள்ளிட்டோர் சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேரேஜ் ஸ்டோரி (Marriage Story) படத்திற்காக ஸ்கார்லெட் ஜான்சன்  உள்ளிட்டோரும் சிறந்த நடிகைக்கான பரிந்துரை பட்டியலில் உள்ளனர். 92-ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

விருதுக்கான பரிந்துரையில் இடம் பெற்றுள்ள படங்கள் வருமாறு:-

சிறந்த திரைப்படம்:ஃபோர்டு விஃபெராரி (  ( Ford v Ferrari) 
தி ஐரிஷ்மேன் ( The Irishman) 
ஜோ ஜோ ராபிட் ( Jojo Rabbit) 
ஜோக்கர் ( Joker) 
லிட்டில் உமன் (Little Women)
மேரேஜ் ஸ்டோரி (Marriage Story)
1917 (1917)
ஒன்ஸ் அப் ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time…in Hollywood)
பாராசைட் ( Parasite)

சிறந்த இயக்குநர்:

மார்டின் ஸ்கோர்செஸ் (த ஐரிஷ்மேன்)
டாட் பிலிப்ஸ் (ஜோக்கர்)
சாம் மென்டெஸ் (1917)
குயின்டின் டரன்டினோ (ஒன்ஸ் அப் ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)
போங் ஜூன் ஹோ (பாராசைட்)

சிறந்த நடிகை:

சைன்தியா எரிவோ (ஹாரியெட்)
ஸ்கேர்லெட் ஜான்சன் (மேரேஜ் ஸ்டோரி)
சேஷா ரோனன் (லிட்டில் உமென்)
சார்லிஸ் தெருன் (பாம்ஷெல்)
ரினீ ஷெல்வெஜெர் (ஜுடி)

சிறந்த நடிகர்:அன்டோனியோ பந்த்ராஸ் (பெய்ன் அன்ட் குளோரி)
லியார்னாடோ டிகாபிரியோ (ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)
ஜோக்குயின் போனிக்ஸ் (ஜோக்கர்)
ஜோனோதன் ப்ரெஸ் (த டூ போப்ஸ்)
ஆடம் டிரைவர் (மேரேஜ் ஸ்டோரி)

சிறந்த குணசித்திர நடிகை:

காதி பேட்ஸ் (ரிச்சர்ட் ஜுவல்)
லவுரா டெரன் (மேரேஜ் ஸ்டோரி)
ஸ்கேர்லெட் ஜான்சன் (ஜோ ஜோ ரேபிட்)
ஃப்ளோரென்ஸ் புக் (லிட்டில் உமன்)
மார்கோட் ராப்பி (பாம் ஷெல்)

சிறந்த குணசித்திர நடிகர்:

டாம் ஹென்க்ஸ் (எ பியூட்டிஃபுல் டே இன் த நெய்பர்ஹுட்)
அன்தோனி ஹோப்கின்ஸ் (த டூ போப்ஸ்)
அல் பசினோ (த ஐரிஷ்மேன்)
ஜோ பெஸ்சி (த ஐரிஷ்மேன்)
ப்ராட் பிட் (ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)

நேரடி திரைக்கதை:

ரைன் ஜான்சன் (நைவ்ஸ் அவுட்)
நோவா பவும்பாக் (மேரேஜ் ஸ்டோரி)
சாம் மென்டெஸ், க்ரெஸ்டி வில்சன் கார்ன்ஸ் (1917)
குயின்டின் டரன்டினோ (ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)
பாங் ஜூன் ஹு, ஹான் ஜின் உன் (பாராசைட்)

தழுவல் திரைக்கதை:

கிரிடா ஜெர்விக் (லிட்டில் உமென்)
அந்தோனி மெக்கார்டென் (த டூ போப்ஸ்)
டோட் பிலிப்ஸ், ஸ்கார்ட் சில்வர் (ஜோக்கர்)
தைய்கா வைடிடி (ஜோ ஜோ ரேபிட்)
ஸ்டிவன் சைலியான் (த ஐரிஷ்மேன்)

சிறந்த திரைப்பட எடிட்டிங்

த ஐரிஷ்மேன்
ஜோ ஜோ ரேபிட்
ஜோக்கர்
ஃபோர்டு விஃபெராரி
பாராசைட்

இதைத்தவிர சிறந்த இசை, ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், சிறந்த ஒளிப்பதிவு, அனிமேஷன் திரைப்படம், காட்சி அமைப்புகள், சர்வதேச திரைப்படம், ஆவணப்படம் உள்ளிட்ட பல விருதுகளுக்கான பரிந்துரைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.