சினிமா செய்திகள்

வெப் தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் + "||" + Aishwarya Rajesh and Kadhi n the web series

வெப் தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர்

வெப் தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர்
வெப் தொடரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கதிர் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

சினிமாவை அடுத்து வெப் தொடர்கள் ரசிகர்களை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளன. இந்தியில் ஆரம்பித்த இந்த வெப் தொடர் மோகம் தமிழ், தெலுங்கிலும் பரவி உள்ளது. முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க வருகிறார்கள். ஜெயலலிதாவின் வாழ்க்கை வெப் தொடராக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யராஜ், பிரசன்னா, பாபிசிம்ஹா, நித்யாமேனன், பிரியாமணி, மீனா, இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அர்ஜுன் ராம்பால், ஜாக்கி ஷாரப். அபிஷேக் பச்சன், நவாஜூதின் சித்திக், விவேக் ஓபராய், நடிகைகள் கியூமா குரோஷி, கியாரா அத்வானி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள்.

தமன்னாவும் வெப் தொடருக்கு வருகிறார். இந்த நிலையில் நடிகர் கதிர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் புதிய வெப் தொடரில் நடிக்க உள்ளனர். கதிர், மத யானை கூட்டம் படத்தில் அறிமுகமானவர், கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், பிகில், ஜடா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் நடிக்கும் வெப் தொடரை புஷ்கர் காயத்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஓரம்போ, விக்ரம் வேதா ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்கள் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...