சினிமா செய்திகள்

விஜய்யுடன் ஜோடி சேர விரும்பும் மெஹ்ரின் + "||" + Mehrin who wants to pair with Vijay

விஜய்யுடன் ஜோடி சேர விரும்பும் மெஹ்ரின்

விஜய்யுடன் ஜோடி சேர விரும்பும் மெஹ்ரின்
விஜய்யுடன் ஜோடி சேர, நடிகை மெஹ்ரின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழில் அறிமுகமான மெஹ்ரின் பிர்ஷதா, இப்போது தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் பஞ்சாபி பெண். விவசாய குடும்பத்தை சேர்ந்தவள். தெலுங்கு படத்தில்தான் அறிமுகமானேன். அந்த படத்தின் வெற்றியால் தமிழுக்கு வந்தேன். நெஞ்சில் துணிவிருந்தால் படத்துக்கு பிறகு நல்ல கதை அமையாததால் இடைவெளி ஏற்பட்டது. இப்போது பட்டாஸ் படம் மூலம் இரண்டாவது ரவுண்ட் தொடங்கி உள்ளேன்.


இந்த படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்தது. ஜாலியான பெண்ணாக வருகிறேன். தனுஷ் திறமையான நடிகர், நல்ல மனிதர். தனது கதாபாத்திரம் சிறப்பாக வர கஷ்டப்படுவார். தொழிலில் ஈடுபாடு உள்ளவர். அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்தியை விட தென்னிந்திய படங்களே எனக்கு பிடிக்கும். தமிழ் திரையுலகில் திறமையான இயக்குனர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் உள்ளனர். தரமான படங்களையும் எடுக்கின்றனர். விஜய், அஜித்குமார், சிவகார்த்திகேயன் ஆகியோர் ஜோடியாகவும் நடிக்க ஆசை உள்ளது. கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாகவும் நடிக்க தயார். வாழ்க்கை கதை களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன். தமிழ் கற்று வருகிறேன்.”

இவ்வாறு மெஹ்ரின் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...