சினிமா செய்திகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு? + "||" + Visa for actor Rajinikanth Sri Lankan government denial?

நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு?

நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு?
யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
கொழும்பு

இலங்கை வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், சமீபத்தில் சென்னை வந்திருந்த போது, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார். அப்போது, இலங்கைக்கு வருமாறு, ரஜினிகாந்துக்கு அவர் அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. சிங்கள நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் மூலம், இந்த தகவல் உறுதியாகி உள்ளது. அரசியல் நடவடிக்கைக்காகவே அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவதாகவும், அத்தகைய நடவடிக்கைக்கு விசா வழங்கப்படமாட்டாது என, இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு: கவிஞர் வைரமுத்து வாழ்த்து
ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு செய்வதையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. தமிழில் இருந்து தெலுங்குக்கு போகிறார்-விஜய் பட டைரக்டரின் திடீர் மாற்றம்
லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார்.
3. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாரா? இல்லையா? என்பது அவருக்கே தெரியாது - நடிகர் வடிவேலு சொல்கிறார்
‘ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாரா? இல்லையா? என்பது அவருக்கே தெரியாது’ என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
4. என்ன பேசினார் ரஜினிகாந்த்? கட்சி தொடங்குவாரா ...! அரசியலுக்கு வருவாரா...! மீண்டும்... !!!
ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றி முதல் முறையாக வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
5. கட்சி வேற.. ஆட்சி வேற... என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்க வேண்டும்- ரஜினிகாந்த்
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்கிற முழக்கத்தோடு மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்களை சந்திக்க வேண்டும் என ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.