சினிமா செய்திகள்

ஹாலிவுட்டில் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ + "||" + Parthiban's Oththa Seruppu in Hollywood

ஹாலிவுட்டில் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’

ஹாலிவுட்டில் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’
பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படம் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அவரே இயக்கி நடித்து இருந்தார்.
 படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்களின் குரல்கள் மட்டுமே கேட்கும். பார்த்திபன் ஒருவர் மட்டுமே திரையில் தெரிவார்.

படத்தை பார்த்த முன்னணி இயக்குனர்கள் பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை பாராட்டியதுடன் உலக தரத்தில் இருப்பதாக புகழ்ந்தனர். பட விழாக்களிலும் இந்த படம் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது. ஒத்த செருப்பு இந்தியிலும் ரீமேக் ஆகிறது. பார்த்திபன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் நவாஜூதின் சித்திக் நடிப்பதாக கூறப்படுகிறது.

இவர் தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். தற்போது ஹாலிவுட்டிலும் ஒத்த செருப்பு படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடப்பதாக பார்த்திபன் கூறியுள்ளார். ஒத்த செருப்பு படத்தை ஆங்கிலத்தில் எடுத்தால் நீங்கள் கொண்டாடப்படுவீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த பார்த்திபன் அதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். அடுத்து பார்த்திபன் இயக்கி நடிக்கும் புதிய படத்துக்கு இரவின் நிழல் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த படத்தையும் பார்த்திபன் புதுமையாக இயக்க இருக்கிறார். அதாவது முழு படத்தையும் ஒரே ‘ஷாட்’டில் எடுக்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியில் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’
பார்த்திபன் நடித்து இயக்கி திரைக்கு வந்த ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே கேட்கும்.
2. பார்த்திபன் படத்துக்கு விருது
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.