சினிமா செய்திகள்

பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார் + "||" + Actor Rajinikanth complains to police

பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்

பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்
பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கோவை,

பெரியாரின் நற்பெயருக்கு களங்கம்  ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகம்  சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

திராவிடர் விடுதலை கழக  மாநகர தலைவர் நேருதாஸ், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பொய்யான தகவலை வெளியிட்டதாகவும், இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நேருதாஸ், ரஜினி மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தர்பார் படம் திரையிடப்பட்டு இருக்கும்  திரையரங்குகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியன் 2 விபத்து: எந்த உதவிகள் செய்தாலும் இழந்த உயிர்களுக்கு ஈடாகாது - இயக்குநர் ஷங்கர் வேதனை
இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தின் அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும் இன்னும் மீளவில்லை என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
2. வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்?
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
3. இனி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே படப்பிடிப்பு தளங்களோடு ஒப்பந்தம் - பெப்சி தீர்மானம்
படப்பிடிப்பு தளத்தினர் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் போட்ட பின்னரே இனி பணியாளர்கள் தொழில் செய்ய முன்வருவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கூறினார்.
4. 24 மணி நேரத்தில் விஜயின் குட்டி கதை பாடலுக்கு "90 லட்சம் பார்வைகள் 10 லட்சம் லைக்குகள் "
24 மணி நேரத்தில் விஜயின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல் பெற்ற பார்வைகள் மற்றும் லைக்குகள் விவரத்தை சோனி நிறுவனம் அறிவித்து உள்ளது.
5. தமிழ் சினிமா சிறிய பிரச்சினையில் இருந்து பெரிய பிரச்சினை நோக்கி செல்கிறது-ஆர்.கே.செல்வமணி
தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது என்று, பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.