சினிமா செய்திகள்

ரஜினி படத்தில் நடித்த பிறகு உணவு பழக்கத்தை மாற்றிய கியூமா + "||" + Huma qureshi , who changed her eating habits after starring in Rajini

ரஜினி படத்தில் நடித்த பிறகு உணவு பழக்கத்தை மாற்றிய கியூமா

ரஜினி படத்தில் நடித்த பிறகு உணவு பழக்கத்தை மாற்றிய கியூமா
ரஜினி படத்தில் நடித்த பிறகு உணவு பழக்கத்தை மாற்றியுள்ளதாக நடிகை கியூமா தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்தவர் கியூமா குரோஷி. அதிக இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“நடிகைகள் கவர்ச்சிக்கு மட்டுமல்ல, கதைக்கும் முக்கியம் என்ற கருத்து பரவி வருகிறது. கதாபாத்திரத்துக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கஷ்டப்பட கதாநாயகிகள் தயாராகி இருக்கிறார்கள். உழைப்புக்கு பலனும் கிடைக்கிறது. நான் சினிமாவில் நடிக்க குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. ஆனாலும் உறுதியாக இருந்து நடிகையானேன்.


மும்பையில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த கஷ்டங்களை இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது. ஒரு சிறிய வாய்ப்புக்காக காலே தேய்ந்து போனமாதிரி சுற்றிய நாட்கள் இருக்கிறது. அதன்பிறகு விளம்பர படங்களில் நடித்து சினிமாவுக்கு வந்தேன். இப்போது ஹாலிவுட் படங்களில் கூட நடிக்கிறேன். நான் வட இந்திய பெண். தென்னிந்திய உணவுகள் பற்றி எதுவும் தெரியாது. ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகுதான் தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு தென்னிந்திய உணவுக்கு அடிமையாகி விட்டேன். வட இந்திய உணவுகள் இப்போது பிடிக்கவில்லை. பட வாய்ப்புக்காக வலைத்தளத்தில் நான் கவர்ச்சி படங்களை வெளியிடுவதாக சொல்கிறார்கள். கவர்ச்சி படங்களை பார்த்து எப்படி பட வாய்ப்புகள் தருவார்கள். சினிமாவுக்கு கவர்ச்சி மட்டும் போதாது. மேலும் பல திறமைகள் வேண்டும்.”

இவ்வாறு கியூமா குரோஷி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடற்பறவையின் உணவு பழக்கத்தை மாற்றிய ஊரடங்கு
ஊரடங்கு கார்ணமாக கடற்பறவைகள் தங்கள் உணவு பழக்கத்தை மாற்றிக்கொண்டுவிட்டதாக தெரியவந்துள்ளது.