சினிமா செய்திகள்

நடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + 75 year old actor hospitalized next day after marrying actress

நடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதி
நடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

வங்க மொழி படங்களில் பிரபல நடிகராக இருப்பவர் திபாங்கர் தே. இவர் 1970 மற்றும் 80-களில் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதன்பிறகு வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருதும் பெற்று இருக்கிறார்.


திபாங்கர் தேவுக்கு தற்போது 75 வயது ஆகிறது. இவருக்கும், 49 வயதான டோலோன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. டோலோனும் வங்க மொழி படங்களில் நடித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். தற்போது திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு எடுத்தனர்.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திபாங்கர் தே-டோலோன் திருமணம் எளிமையாக நடந்தது. சமூக வலைத்தளத்தில் சிலர் வாழ்த்தினர். இன்னும் சிலர் திருமணத்தை விமர்சித்தனர். திருமணம் முடிந்த பிறகு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த மறுநாள் திபாங்கர் தேவுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். திருமணம் முடிந்த அடுத்த நாளே திபாங்கர் தே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது வங்க மொழி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை சஞ்சனா, டாக்டரை திருமணம் செய்தாரா? சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு
போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணி, டாக்டரை திருமணம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. உத்தவ் தாக்கரேயை தரக்குறைவாக பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார்
உத்தவ் தாக்கரேயை தரக்குறைவாக பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
3. போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்: நடிகை சஞ்சனா கல்ராணி அதிரடி கைது
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
4. போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 2-வது நாளாக நடிகை ரியாவிடம் விசாரணை
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 2-வது நாளாக நடிகை ரியாவிடம் விசாரணை நடத்தினர்.
5. போதைப்பொருள் வழக்கில் இதுவரை 8 பேர் கைது நடிகை ரியாவிடம் 6 மணி நேரம் விசாரணை இன்று மீண்டும் ஆஜராக உத்தரவு
போதைப்பொருள் வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை ரியாவிடம் நேற்று அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் இன்று அவரை மீண்டும் பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.