சினிமா செய்திகள்

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா? + "||" + In Jayalalithaa's life movie Piriyamani

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா?

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா?
ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க பிரியாமணியையும் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமி நடிக்கிறார். இருவரது தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த ரசிகர்கள் ஜெயலலிதா தோற்றத்துக்கு கங்கனா ரணாவத் பொருந்தவில்லை என்று விமர்சித்தனர்.

ஆனால் அரவிந்தசாமி தோற்றம் எம்.ஜி.ஆர். வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக பாராட்டி உள்ளனர். அவரது புகைப்படத்தையும் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். தலைவி படத்தை விஜய் டைரக்டு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.

தலைவி படத்தில் நடிக்க பிரியாமணியையும் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. தலைவி படத்தில் சசிகலாவாக நடிக்கிறீர்களா? என்று பிரியாமணியிடம் கேட்டபோது அதுகுறித்து இப்போது எதுவும் நான் பேசமாட்டேன் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “இந்தியில் அஜய்தேவ்கானுடன் மைதான் படத்தில் நடிக்கிறேன். இதில் நடிக்க போனிகபூர் என்னை அழைத்து பேசினார். அவரது அலுவலகத்தில் வைத்துதான் படத்தின் இயக்குனர் அமித் கதை சொன்னார். உடனே ஒப்புக்கொண்டேன். இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன். அஜய்தேவ்கானுடன் நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார்.