சினிமா செய்திகள்

அஜித்துடன் இணைந்து நடிக்க முடியாதது மிகுந்த கவலை அளிக்கிறது- நடிகர் பிரசன்னா + "||" + It is impossible to work with Ajith Is of great concern Actor Prasanna

அஜித்துடன் இணைந்து நடிக்க முடியாதது மிகுந்த கவலை அளிக்கிறது- நடிகர் பிரசன்னா

அஜித்துடன் இணைந்து  நடிக்க முடியாதது மிகுந்த கவலை அளிக்கிறது- நடிகர் பிரசன்னா
நடிகர் அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது மிகுந்த கவலையளிப்பதாக நடிகர் பிரசன்னா கூறி உள்ளார்.
சென்னை

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித்தின் 60-வது படமாக ‘வலிமை’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் போனி கபூரின் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்க எச்.வினோத் இயக்குகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பூஜையுடன் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு  முடிந்துள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவலை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு. 

அஜித்துக்கு பிடித்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. வலிமை படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் பிரசன்னா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. அண்மையில் ரசிகர் ஒருவர் பிரசன்னாவிடம், வலிமை படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பிரசன்னா, தகவலுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதை வைத்து அவர் நடிப்பது உறுதி என்று பேச தொடங்கினர்.
மேலும் பிரசன்னா, அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், வலிமை படக்குழு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் பிரசன்னா தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

 “வலிமை படத்தில் அஜித்துடன் நான் நடிக்க வேண்டும் என்று பலரும் விரும்பி எனக்கு வாழ்த்து சொன்னீர்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்ததும் உண்மைதான். என்னுடைய திரைவாழ்க்கையில் மிகப்பெரிய அறிவிப்பாக இச்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் துரதிருஷ்ட வசமாக அந்த வாய்ப்பு எனக்கு இந்தமுறை கிடைக்கவில்லை.

விரைவில் தல அஜித்துடன் இணைந்து நடிப்பேன் என்று நம்புகிறேன். அஜித்துடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த கவலையளித்தாலும் உங்களுடைய அன்பால் இதிலிருந்து மீண்டு விட்டேன்.” என்று பிரசன்னா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. இந்தியன் 2 விபத்து: எந்த உதவிகள் செய்தாலும் இழந்த உயிர்களுக்கு ஈடாகாது - இயக்குநர் ஷங்கர் வேதனை
இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தின் அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும் இன்னும் மீளவில்லை என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
2. வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்?
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
3. இனி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே படப்பிடிப்பு தளங்களோடு ஒப்பந்தம் - பெப்சி தீர்மானம்
படப்பிடிப்பு தளத்தினர் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் போட்ட பின்னரே இனி பணியாளர்கள் தொழில் செய்ய முன்வருவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கூறினார்.
4. 24 மணி நேரத்தில் விஜயின் குட்டி கதை பாடலுக்கு "90 லட்சம் பார்வைகள் 10 லட்சம் லைக்குகள் "
24 மணி நேரத்தில் விஜயின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல் பெற்ற பார்வைகள் மற்றும் லைக்குகள் விவரத்தை சோனி நிறுவனம் அறிவித்து உள்ளது.
5. தமிழ் சினிமா சிறிய பிரச்சினையில் இருந்து பெரிய பிரச்சினை நோக்கி செல்கிறது-ஆர்.கே.செல்வமணி
தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது என்று, பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.