மலையாள படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி ஷகிலா பாணியில் சோனா


மலையாள படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி ஷகிலா பாணியில் சோனா
x
தினத்தந்தி 21 Jan 2020 11:00 PM GMT (Updated: 2020-01-21T23:07:38+05:30)

மலையாள படத்தில் பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக சோனா நடித்துள்ளார்.

தமிழ் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. ஒரு பாடலுக்கு அரை குறை உடையில் குத்தாட்டமும் ஆடி உள்ளார். சொந்தமாக வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்தார். அதில் போதிய வருமானம் இல்லை. சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “என்னை பார்த்து பலரும் படங்களில் நடிக்கவில்லையா என்று கேட்கிறார்கள். நான் தொடர்ந்து நடித்து வருகிறேன். முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன்.  குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன்” என்று சோனா குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது மலையாளத்தில் ‘பச்ச மாங்கா’ என்ற படத்தில் பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதிரடி சண்டை, கவர்ச்சி, நெருக்கமான படுக்கை அறை காட்சிகளுடன் தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் சோனா, ஜாக்கெட், பாவாடை மட்டும் அணிந்து கணவருக்கு துரோகம் செய்யும் மனைவியாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. வேறு ஆணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகிறது. ஷகிலா ஏற்கனவே மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்தார். அவரது படங்கள் வசூலில் மோகன்லால், மம்முட்டி படங்களை பின்னுக்கு தள்ளின.

ஷகிலா இடத்தை பிடிக்க சோனா தயாராகி இருப்பதாக மலையாள பட உலகினர் பேசுகிறார்கள்.

Next Story