“மாஸ்டர்” பற்றி நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட ருசிகர தகவல்


“மாஸ்டர்” பற்றி நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட ருசிகர தகவல்
x
தினத்தந்தி 22 Jan 2020 11:09 AM GMT (Updated: 2020-01-22T16:39:18+05:30)

நடிகை ஆண்ட்ரியா மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

பிகில் படத்துக்கு பிறகு ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். மாளவிகா மோகனன் நாயகியாக வருகிறார். விஜய் சேதுபதி, அர்ஜுன்தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். 

படப்பிடிப்பு டெல்லியிலும், கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையிலும் நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் முக்கிய காட்சிகளை எடுத்தனர். 

இந்த படத்தில் ஆண்ட்ரியா கவர்ச்சியான பேராசிரியை வேடத்தில்  நடிப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா, ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “அதிசயிக்கும் திறமை கொண்ட இயக்குநருடன் 2020 ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றான ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றுகிறேன். வரும் பிப்ரவரியுடன் எனக்கான படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைகிறது”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘மாஸ்டர்’ வரும் மார்ச் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே பிப்ரவரியுடன் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைய உள்ளன. அதனை ஆண்ட்ரியாவின் பதிவும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story