ரகுல்பிரீத் சிங்கின் காதல் அனுபவம்


ரகுல்பிரீத் சிங்கின் காதல் அனுபவம்
x
தினத்தந்தி 22 Jan 2020 11:15 PM GMT (Updated: 2020-01-23T00:23:41+05:30)

காதல் அழகானது, ஆழமானது என்று நடிகை ரகுல்பிரீத் சிங் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ரகுல் பிரீத் சிங். கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்திலும் நடிக்கிறார். அவர் கூறியதாவது:-

காதல் மிகவும் ஆழமானது. அதை புரிந்து கொள்வது ரொம்ப கஷ்டம். நான் காதலில் விழாததற்கு அதுதான் காரணம்.

“அதிக தென்னிந்திய படங்களில் நடித்து பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று இருக்கிறேன். முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் கதாநாயகர்களுடனும் நடித்துள்ளேன். காதல் பற்றி என்னிடம் கேட்கிறார்கள். காதல் அழகானது. ஆழமானது. அதை புரிந்து கொள்வது கஷ்டம். நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை.

ஆனாலும் காதல் பற்றி தெரியும். ஒவ்வொரு படத்திலும் கதாநாயகனை விரட்டி விரட்டி காதலித்து ஏதோ ஒரு கோணத்தில் காதலை தொட்டுவிட்டு வருகிறேன். ஒவ்வொரு கதையும் எனக்கு புதிய காதல் அனுபவத்தை கற்று கொடுக்கிறது. இதனால் எனக்கு நிறைய அனுபவம் வந்து இருக்கிறது.

சினிமா துறைக்கு வராமல் இருந்திருந்தால் காதல் பற்றி நிறைய விஷயம் தெரிந்து இருக்காது. ஒரு காதல் மட்டும் இல்லை. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு காதல் அனுபவங்கள் கிடைக்கிறது. ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு புதிய வாழ்க்கையை அனுபவிப்பதற்கு சமம். சினிமா பயணத்தில் எத்தனையோ வாழ்க்கையை அனுபவித்து வருகிறேன்.”

இவ்வாறு ரகுல் பிரீத்சிங் கூறினார்.

Next Story