பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் 5-வது திருமணம்


பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் 5-வது திருமணம்
x
தினத்தந்தி 23 Jan 2020 10:00 PM GMT (Updated: 2020-01-23T23:25:17+05:30)

ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் ஜான் பீட்டர்சை 5-வது திருமணம் செய்து கொண்டார்.

பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். இவர் பே வாட்ச் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 2010-ல் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இசைக்கலைஞர் டோமி லீ என்பவரை பமீலா 1995-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 3 ஆண்டுகளுக்கு பிறகு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

பின்னர் 2006-ல் கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்தில் அவரையும் விவாகரத்து செய்தார். 2007-ல் ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் நிலைக்கவில்லை. அடுத்த வருடமே அவரை விவாகரத்து செய்தார். ஆனால் 2014-ல் மீண்டும் ரிக் சாலமனை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு வருடத்துக்கு பிறகு ரிக்கை 2-வது தடவையாக விவாகரத்து செய்தார். தற்போது பமீலா ஆண்டர்சனுக்கு 52 வயது ஆகிறது. இந்த நிலையில் பேட்மேன் உள்பட பல ஹாலிவுட் படங்களை தயாரித்த ஜான் பீட்டர்சுடன் பமீலாவுக்கு காதல் மலர்ந்தது. ஜான் பீட்டர்சுக்கு 74 வயது ஆகிறது.

தற்போது ஜான் பீட்டர்சை பமீலா 5-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடந்தது. ஹாலிவுட் நடிகைகள் விவாகரத்து மற்றும் மறுமணம் செய்து கொள்வது சகஜம். ஆனால் பமீலா ஆண்டர்சன் 5-வது திருமணம் செய்து இருப்பதை பரபரப்பாக பேசுகிறார்கள்.

Next Story