டி.சிவாவின் புதிய படம்: ``அக்னி சிறகுகள்,' திகில் பட ரசிகர்களுக்கு பெரிய விருந்து!''


டி.சிவாவின் புதிய படம்:  ``அக்னி சிறகுகள், திகில் பட ரசிகர்களுக்கு பெரிய விருந்து!
x
தினத்தந்தி 24 Jan 2020 10:19 AM GMT (Updated: 2020-01-24T15:49:24+05:30)

அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் திகில் படம், `அக்னி சிறகுகள்.' இந்த படத்தின் கதை-திரைக்கதை எழுதி இயக்குகிறார், நவீன். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார்.

 அருண் விஜய்-விஜய் ஆண்டனியுடன் கதாநாயகிகளாக ஷாலினி பாண்டே, அக்‌ஷராஹாசன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ரெய்மா சென், பிரகாஷ்ராஜ், ஜே.எஸ்.கே. உள்பட முன்னணி நடிகர்-நடிகைகளும் நடிக்கிறார்கள். சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. தொடர்ந்து ரஷியாவின் செயின் பீட்டர்ஸ்பர்க், கஜகஸ்தானின் அல்மேட்டி என வித்தியாசமான `லொகேஷன்'களில் படம் வளர்ந்து வருகிறது.

தற்போது கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில், 9 டிகிரி கடும் குளிரில் ஒரு பயங்கர சண்டை காட்சியை படமாக்கி வருகிறார்கள். இதுபற்றி தயாரிப்பாளர் டி.சிவா கூறும்போது, ``அக்னி சிறகுகள் படம், திகில் பட ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். கடுமையான பனியை பொருட்படுத்தாமல் படக்குழுவினர் அனைவரும் தங்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் தருகிறார்கள். இதுவரை தமிழ் சினிமா கண்டிராத இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்'' என்றார்.

Next Story