நடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி


நடிகைகளின் சம்பள பட்டியல்   நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி
x
தினத்தந்தி 24 Jan 2020 11:15 PM GMT (Updated: 2020-01-24T23:56:32+05:30)

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் விவரம் இணையதளத்தில் பரவி வருகிறது.

திரையுலகில் நடிகர்களை ஒப்பிடும்போது நடிகைகள் சம்பளம் குறைவாகவே உள்ளது. சமீப காலமாக கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களும் வசூல் குவிக்கின்றன. இதனால் நயன்தாரா, திரிஷா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட நடிகைகள் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய சம்பள பட்டியல் விவரமும் இணையதளத்தில் பரவி வருகிறது. நயன்தாரா முன்னணி கதாநாயகர்களின் ஜோடியாகவும், தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் தனித்தும் நடித்து தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்த தர்பார் படம் பொங்கலுக்கு வந்தது.

ஏற்கனவே ரூ.4 கோடி வரை வாங்கிய அவர் தற்போது சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல். அனுஷ்கா இப்போது நிசப்தம் படத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. தமன்னா நடிப்பில் சமீபத்தில் ஆக்‌ஷன் படம் வந்தது. தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. ஒரு படத்துக்கு அவர் ரூ.2½ கோடி கேட்கிறாராம்.

காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். அவர் ரூ.1½ கோடி சம்பளம் நிர்ணயித்துள்ளார். சமந்தாவும் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகி அந்தஸ்தில் இருக்கிறார். சமீப காலமாக அவர் நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வசூல் பார்த்தன. ஒரு படத்துக்கு சமந்தா ரூ.1½ கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

திரிஷா நடித்து திரைக்கு வந்த 96 படம் பெரிய வெற்றி பெற்றது. இப்போது மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவரது சம்பளம் ரூ.1 கோடி. கீர்த்தி சுரேஷ் சம்பளமும் ரூ.1 கோடியாக உயர்ந்துள்ளது. ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷ்மிகா உள்ளிட்ட நடிகைகள் ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை கேட்பதாக தகவல்.

Next Story