டிஜிட்டலில் சிவாஜியின் ‘வியட்நாம் வீடு’


டிஜிட்டலில் சிவாஜியின் ‘வியட்நாம் வீடு’
x
தினத்தந்தி 26 Jan 2020 10:00 PM GMT (Updated: 26 Jan 2020 5:30 PM GMT)

சிவாஜி கணேசனின் பழைய படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி மீண்டும் திரையிட்டு நல்ல வசூல் பார்க்கிறார்கள்.

கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்தமாளிகை, பாசமலர், திருவிளையாடல், சிவகாமியின் செல்வன், ராஜா, ராஜபார்ட் ரங்க துரை ஆகிய படங்கள் டிஜிட்டலில் வந்தன. அடுத்து வியட்நாம் வீடு படத்தையும் டிஜிட்டலில் வெளியிடுகிறார்கள்.

இந்த படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றும் பணிகள் நடந்தன. ஒளி மற்றும் ஒலியை மெருகேற்றி சினிமாஸ்கோப்பில் எச்.டி தரத்தில் உருவாக்கினார்கள். இந்த பணிகள் தற்போது முடிந்து டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். படத்தை ஸ்ரீவிஜயலட்சுமி சவுபர்னிகா பிலிம்ஸ் அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வருகிறது. வியட்நாம் வீடு 1970-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம்.

சிவாஜியின் முக்கிய படங்கள் பட்டியலில் இந்த படத்தையும் சேர்த்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். பத்மினி ஜோடியாக வந்தார். நாகேஷ், ஸ்ரீகாந்த், தங்கவேலு ஆகியோரும் நடித்துள்ளனர். பி.மாதவன் இயக்கினார். படத்தை சிவாஜிகணேசனே தயாரித்து இருந்தார்.

திரைக்கதையை சிவாஜியின் கவுரவம் படத்தை இயக்கி பிரபலமான சுந்தரம் எழுதி இருந்தார். இந்த படத்துக்கு பிறகுதான் அவரை வியட்நாம் வீடு சுந்தரம் என்றே அழைத்தனர். படத்தில் இடம்பெற்ற உன் கண்ணில் நீர் வடிந்தால், பாலக்காட்டு பக்கத்திலே பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இந்த படத்தை தெலுங்கில் விந்தா சம்சாரம், கன்னடத்தில் சாந்தி நிவாசா ஆகிய பெயர்களில் ரீமேக் செய்தும் வெளியிட்டனர்.

Next Story