சினிமா செய்திகள்

அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ் + "||" + Next month Release 25 movies

அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்

அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
அடுத்த மாதம் (பிப்ரவரி) 25 படங்களை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. பிப்ரவரி 7-ந்தேதி சீறு, எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்கள் வெளியாகின்றன.
சீறு படத்தில் ஜீவாவும், எம்.ஜி.ஆர் மகன் படத்தில் சசிகுமாரும் கதாநாயகனாக நடித்துள்ளனர். 14-ந்தேதி வானம் கொட்டட்டும், அசோக் செல்வனின் ஓ மை கடவுளே, ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால், அதோ அந்த பறவைபோல ஆகிய படங்கள் வருகின்றன.


வானம் கொட்டட்டும் படம் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி உள்ளது. சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். அதோ அந்த பறவைபோல அமலாபால் நடிப்பில் தயாராகி உள்ள திகில் படம். 21-ந்தேதி, பிரபுதேவா நடித்துள்ள பொன்மாணிக்கவேல், தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகும் தக்கு முக்கு திக்கு தாளம், அருண் விஜய்யின் மாபியா ஆகிய படங்கள் வருகின்றன.

28-ந்தேதி மாதவனின் ராக்கெட்ரி, திரிஷாவின் பரம பதம் விளையாட்டு, விஷாலின் சக்ரா ஆகிய படங்கள் வெளியாகின்றன. ஆயிரம் பொற்காசுகள், தட்றோம் தூக்குறோம், வால்டர், காட்பாதர், சின்ட்ரெல்லா, காக்கி, ஜாஸ்மின், பொம்மை, எவனும் புத்தனில்லை, கடைசி விவசாயி, டே நைட், அலேகா ஆகிய படங்களையும் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. கடைசி நேரத்தில் சில படங்களின் தேதிகள் மாறலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த மாதம் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் பாதிக்கப்படும் கவர்னர் கிரண்பெடி சொல்கிறார்
அரசு ஊழியர்கள் சம்பளம், செலவு, ஓய்வூதியம் போன்றவை அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் பாதிக்கப்படும் என கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.