சினிமா செய்திகள்

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக திரிஷா? + "||" + In Ponniyin Selvan film For Jayam Ravi Trisha as sister

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக திரிஷா?

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக திரிஷா?
‘பொன்னியின் செல்வன்’ நாவல் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட சினிமா படமாக தயாராகிறது. ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர்.
சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், ஜெயராம், லால், ஐஸ்வர்யாராய், திரிஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யாராயும் நடிப்பதாக கூறப்படுகிறது. திரிஷா என்ன கதாபாத்திரத்தில் வருகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது அவர் குந்தவையாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுபோல் ராஜராஜ சோழன் வேடத்தில் ஜெயம் ரவி நடிப்பதாகவும் பேசப்படுகிறது.


ராஜராஜ சோழனின் அக்காள் குந்தவை என்பதால் ஜெயம் ரவிக்கு அக்காவாக திரிஷா நடிப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. குந்தவைதான் வந்தியத்தேவனுக்கு ஜோடி. எனவே கார்த்திக்கு ஜோடியாக அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

பொன்னியின் செல்வன் படத்தை ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். அங்கு அரண்மனை அரங்குகள் அமைத்து தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு புகைப்படங்களை பார்த்ததாகவும், அனைத்தும் பிரமாதமாக இருப்பதாகவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.