சினிமா செய்திகள்

‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் விஜய்-விஜய்சேதுபதி தோற்றங்கள் + "||" + Master will star in the film Vijay-Vijayesedupathi Appearances

‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் விஜய்-விஜய்சேதுபதி தோற்றங்கள்

‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் விஜய்-விஜய்சேதுபதி தோற்றங்கள்
பிகில் படத்துக்கு பிறகு மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் வருகிறார்.
விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன்தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் உள்ளனர். இதன் படப்பிடிப்பு டெல்லியிலும், சென்னை பூந்தமல்லி மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் நடந்தது.

கர்நாடகாவில் உள்ள ஷிமோகா சிறையிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். தற்போது சென்னையில் சிறைச்சாலை அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறார்கள். மாஸ்டர் கொரிய படத்தின் கதை என்று தகவல் கசிந்தது. படக்குழுவினர் மறுத்தனர். படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக வருகிறார் என்றும், நீட் தேர்வு பாதிப்புகளை மையப்படுத்தி உருவாகிறது என்றும் தகவல்கள் பரவின.


இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. விஜய்யின் தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன. தற்போது விஜய்யும், விஜய் சேதுபதியும் ரத்தம் தெறிக்க ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு மோதுவது போன்ற இன்னொரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதி கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்துள்ளார். மாஸ்டர் படத்தில் வில்லனாக அவர் நடிக்கிறார் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் போஸ்டர் அதை உறுதிப்படுத்துவதுபோல் உள்ளது. இருவரும் சட்டை போடாமல் வெறும் உடம்புடன் சண்டை போடுவதுபோல் காட்சி அமைந்துள்ளது.

இந்த தோற்றங்கள் வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கியுள்ளனர். புதிய ஹேஷ்டேக்கையும் உருவாக்கி உலக அளவில் டிரென்டாக்கி வருகிறார்கள். மாஸ்டர் படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விஜய் குடும்பத்து மாப்பிள்ளை ஆகிறார், அதர்வா தம்பி பெண் டைரக்டருடன் காதல் திருமணம்
நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ், விஜய் குடும்பத்து மாப்பிள்ளை ஆகிறார். மணமகள், ஒரு படத்தை டைரக்டு செய்தவர். இது, காதல் திருமணம்.
2. மணிரத்னம் படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன்?
மணிரத்னம் படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
3. “எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” - சசிகுமார்
தனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய் நடிக்க உள்ளதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
4. கொரோனா அச்சுறுத்தல்: விஜய், சூர்யா, கார்த்தி படங்கள் ரிலீஸ் தள்ளி வைப்பு?
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன.
5. விஜய் படத்தை இயக்க பார்த்திபன் விருப்பம்
நடிகர் பார்த்திபன் விஜய் படத்தை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.