பட அதிபர்களுக்கு நஷ்டம்: இளம் நடிகருக்கு ரூ.1 கோடி அபராதம்


பட அதிபர்களுக்கு நஷ்டம்: இளம் நடிகருக்கு ரூ.1 கோடி அபராதம்
x
தினத்தந்தி 28 Jan 2020 11:03 PM GMT (Updated: 28 Jan 2020 11:03 PM GMT)

இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மலையாள இளம் கதாநாயகன் ஷேன் நிகம்.

ஷேன் நிகம் இவரை வெயில் என்ற பெயரில் தயாராகும் மலையாள படத்தில் ஒப்பந்தம் செய்து கதாபாத்திரத்துக்காக தலைமுடியை நீளமாக வளர்க்கும்படி அறிவுறுத்தினர். தலைமுடி வளர்ந்த பிறகு படப்பிடிப்பை நடத்தினர்.

இடையில் குர்பானி என்ற படத்தில் நடிக்கவும் ஷேன் நிகமை ஒப்பந்தம் செய்தனர். வெயில் படப்பிடிப்பு முடியாத நிலையில் குர்பானி படத்தில் நடிக்க தலைமுடியை வெட்டிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஷேன் நிகம் மீது படத்தின் இயக்குனர் சரத் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் ஆகியோர் மலையாள நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்தனர்.

இதையடுத்து புதிய படங்களில் ஷேன் நிகமை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று மலையாள நடிகர் சங்கம் வற்புறுத்தியது. இதைத் தொடர்ந்து ஷேன் நிகமால் நஷ்டமடைந்த 2 தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட ஈடாக அவர் ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து உள்ளது.

ஷேன் நிகம் தமிழில் சீனுராமசாமி இயக்கும் ஸ்பா படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story