சினிமா செய்திகள்

உடையில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் ஆபாசம்: பிரியங்கா சோப்ராவை சாடிய ரசிகர்கள் + "||" + Hollywood actress dressed in porn costume: Priyanka Chopra fans of condemnation

உடையில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் ஆபாசம்: பிரியங்கா சோப்ராவை சாடிய ரசிகர்கள்

உடையில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் ஆபாசம்: பிரியங்கா சோப்ராவை சாடிய ரசிகர்கள்
ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு ஆபாசமாக உடையணிந்ததாக, நடிகை பிரியங்கா சோப்ராவை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து உலகம் முழுவதும் அறியப்பட்டார். அதன்பிறகு மேற்கத்திய நாகரிகத்துக்கு முழுமையாக மாறி பொது விழாக்கள் மற்றும் விருந்துகளில் கவர்ச்சி உடைகளில் பங்கேற்று வருகிறார். தற்போது கிராமி விருது வழங்கும் விழாவில் அவர் அணிந்திருந்த ஆபாச உடை சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இசை கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. 2020-ம் ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் நடந்தது. இதில் நடிகைகளும், பாடகிகளும் கவர்ச்சி உடைகளில் பங்கேற்று ‘போஸ்’ கொடுத்தனர். போட்டோகிராபர்கள் விதம் விதமாக படம் எடுத்தார்கள்.

பிரியங்கா சோப்ராவும் தனது கணவர் நிக் ஜோனசுடன் கிராமி விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் அணிந்து வந்த உடை பார்வையாளர்களை நிலைகுலைய வைத்தது. ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் வகையில் அந்த ஆடை ஆபாசமாக இருந்ததாக அதிர்ந்தனர்.

உடலில் மறைக்க வேண்டிய சில பகுதிகளை வெளிப்படுத்தும் வகையில் அந்த ஆடை வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆபாச உடையில் தோன்றிய பிரியங்கா சோப்ராவின் இந்த புகைப்படம் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரை சமூக வலைத்தளத்தில் பலர் கடுமை யாக சாடி வருகிறார்கள். இன்னும் சிலர் ஆடை நன்றாக இருப்பதாக பாராட்டியும் உள்ளனர்.