சினிமா செய்திகள்

வெளிநாட்டில் படமாகிறது: அஜித்தின் ‘வலிமை’ படத்தில் ‘பைக் ரேஸ்’ + "||" + Pictured Abroad: Bike race in Ajith's Valimai film

வெளிநாட்டில் படமாகிறது: அஜித்தின் ‘வலிமை’ படத்தில் ‘பைக் ரேஸ்’

வெளிநாட்டில் படமாகிறது: அஜித்தின் ‘வலிமை’ படத்தில் ‘பைக் ரேஸ்’
அஜித்தின் ‘வலிமை’ படத்தில் இடம்பெற உள்ள ‘பைக் ரேஸ்’ வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இதற்காக உடற்பயிற்சிகள் செய்து தோற்றத்தை இளமையாக மாற்றி இருக்கிறார்.


முதல் கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் முடித்துள்ளனர். அடுத்து சென்னையில் படப் பிடிப்பை நடத்த உள்ளனர். இதற்காக ஸ்டூடியோவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. வலிமை படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் விவரத்தை ரகசியமாக வைத்துள்ளனர். கதாநாயகி யார்? என்றும் தெரிவிக்கவில்லை. கியூமா குரோஷி கதாநாயகியாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவர் ஏற்கனவே காலா படத்தில் ரஜினியுடன் நடித்து இருந்தார்.

வலிமை படத்தில் அஜித்துக்கு பிடித்தமான பைக் மற்றும் கார்பந்தய காட்சிகள் இடம்பெறுகின்றன. இந்த காட்சிகளை சுவிட்சர்லாந்தில் படமாக்க உள்ளதாகவும், இதற்காக தயாரிப்பாளர் போனிகபூர் அந்த நாட்டுக்கு சென்று சிறப்பு அனுமதி வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை படப்பிடிப்பு முடிந்ததும் வட இந்தியா சென்று முக்கிய காட்சிகளை படமாக்குகிறார்கள். அதை முடித்து விட்டு பைக், கார் பந்தைய காட்சிகளை படமாக்க அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் சுவிட்சர்லாந்து புறப்பட்டு செல்கிறார்கள்.

வலிமை படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திரைக்கு வருவது எப்போது? ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்
திரைக்கு வருவது எப்போது? ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்
2. வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்பிய 3400 பேர் 28 நாள் தனிமை காலத்தை நிறைவு செய்துள்ளனர் - ராமநாதபுரம் கலெக்டர் தகவல்
வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 3400 பேர் 28 நாள் தனிமை காலத்தை நிறைவு செய்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
3. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது - அமைச்சர் விஜயபாஸ்கர்
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
4. வெளிநாட்டில் இருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனை: இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஹோலி கொண்டாட்டங்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ரத்து செய்துள்ளனர்.
5. வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்?
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.