சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்கும் ஷோபனா + "||" + Again Acting Shobana

மீண்டும் நடிக்கும் ஷோபனா

மீண்டும் நடிக்கும் ஷோபனா
தமிழ், மலையாள பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஷோபனா.
பாக்யராஜுடன் ஜோடி சேர்ந்த ‘இது நம்ம ஆளு’ ரஜினியுடன் நடித்த ‘தளபதி’ பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. எனக்குள் ஒருவன், பாட்டுக்கு ஒரு தலைவன், பொன்மனச் செல்வன் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்த மணிசித்திரத்தாழு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. கடந்த சில வருடங்களாக ஷோபனா படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ‘வரனே அவஷ்யமுன்டு’ என்ற மலையாள படம் மூலம் மீண்டும் மறுபிரவேசம் எடுத்துள்ளார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை துல்கர் சல்மான் தயாரித்து நடிக்கிறார். அனுப் சத்யன் இயக்குகிறார். சுரேஷ்கோபி, கல்யாணி பிரியதர்ஷன், ஊர்வசி ஆகியோரும் நடிக்கின்றனர். பல வருடங்களுக்கு பிறகு ஷோபனா நடிப்பதால் படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படம் மூலம் சினிமாவில் இன்னொரு ரவுண்டு வரும் முடிவில் இருக்கிறார். அடுத்து தமிழ் பட வாய்ப்புகளையும் எதிர்பார்க்கிறார். ரசிகர்களும் ஷோபனா தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.