சினிமா செய்திகள்

“திருமணம் செய்து கொண்டு தாயாக ஆசை” -கங்கனா ரணாவத் + "||" + Desire to be married and become a mother

“திருமணம் செய்து கொண்டு தாயாக ஆசை” -கங்கனா ரணாவத்

“திருமணம் செய்து கொண்டு தாயாக ஆசை” -கங்கனா ரணாவத்
இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் தலைவி படத்தில் நடித்து வருகிறார்.
இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். அவரது ஜெயலலிதா தோற்றமும் வெளியாகி உள்ளது. கங்கனா ரணாவத் அளித்த பேட்டி வருமாறு:-

திருமண முறையில் எனக்கு வேறு அபிப்பிராயம் இருந்தது. குழந்தைகள் பெற்றுக்கொள்ளத்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று நினைத்தேன். இதனால் திருமணம் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்றும் முடிவு செய்தேன். இப்போது அந்த எண்ணம் மாறி இருக்கிறது.

விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளேன். குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. சமூக வலைத்தள விவாதங்கள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் அதை விட்டு விலகி இருக்கிறேன். எனக்கு கோபம் அதிகம் வரும். அந்த கோபத்துக்கு காரணமும் இருக்கும்.

எப்போது கோபப்பட்டாலும் அதில் நல்லதுதான் நடந்து உள்ளது. நான் பணத்தை தாராளமாக செலவு செய்வதாக சொல்கிறார்கள். என்னை நேசிக்கிறவர்களுக்காகவும், சமூக சேவை நிகழ்ச்சிகளுக்காகவும் செலவு செய்ய தயங்க மாட்டேன். சினிமா துறையில் எனக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். வேறு யாருக்கும் இந்த அளவுக்கு இல்லை. சினிமாவில் இருந்தால் விரோதிகள் இருக்கத்தான் செய்வார்கள்.

இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உடல் எடையை கூட்டி, குறைத்தார்!
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, `தலைவி' என்ற பெயரில் படமாகி வருகிறது.