சினிமா செய்திகள்

சுதா கொங்கரா இயக்கத்தில் விஜய்? + "||" + Vijay in Sudha Kongara movement?

சுதா கொங்கரா இயக்கத்தில் விஜய்?

சுதா கொங்கரா இயக்கத்தில் விஜய்?
பிகில்’ படத்துக்கு பிறகு ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் வருகிறார்.
பிகில்’ படத்துக்கு பிறகு ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் வருகிறார். விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன்தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் உள்ளனர். பெரும்பகுதி படப்பிடிப்பு டெல்லியிலும், கர்நாடகாவிலும் நடந்தது.

தற்போது சென்னையில் சிறைச்சாலை அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறார்கள். விஜய் கல்லூரி பேராசிரியராக வருகிறார் என்றும், நீட் தேர்வு பாதிப்புகளை மையப்படுத்தி படம் உருவாகிறது என்றும் தகவல் கசிந்துள்ளது. விஜய்யின் தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன.

விஜய்யும், விஜய் சேதுபதியும் ரத்தம் தெறிக்க ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு மோதுவது போன்ற இன்னொரு போஸ்டரையும் சமீபத்தில் வெளியிட்டனர். மாஸ்டர் படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

மோகன்ராஜா, அட்லி, சமுத்திரக்கனி, பேரரசு, பாண்டிராஜ் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டன. தற்போது பெண் இயக்குனர் சுதா கொங்கரா, விஜய்யிடம் கதை சொல்லி இருப்பதாகவும், அந்த கதை விஜய்க்கு பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாதவன் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற இறுதி சுற்று படத்தை சுதா கொங்கரா இயக்கி இருந்தார். சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படத்தையும் டைரக்டு செய்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.