சினிமா செய்திகள்

டப்பிங் யூனியன் தேர்தல்: ராதாரவியை எதிர்த்து பாடகி சின்மயி மனு தாக்கல் + "||" + Dubbed Union Election:  chinmayi files petition against Radha Ravi

டப்பிங் யூனியன் தேர்தல்: ராதாரவியை எதிர்த்து பாடகி சின்மயி மனு தாக்கல்

டப்பிங் யூனியன் தேர்தல்: ராதாரவியை எதிர்த்து பாடகி சின்மயி மனு தாக்கல்
டப்பிங் யூனியன் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திரைப்பட பாடகி சின்மயியை உள்ளே அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை

டப்பிங் யூனியன்  தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்  நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து ராமராஜ்யம் அணியின் சார்பில் சின்மயி போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று மனு தாக்கல் செய்வதற்காக சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சின்மயி வந்தார்.

’மீ டூ’ விவகாரத்தின் போது டப்பிங் யூனியனில் சந்தா தொகை செலுத்தாத காரணத்தால் சின்மயி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி உள்ளே வரக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு சமாதானப்படுத்தி அவரை உள்ளே அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து சின்மயி மனு தாக்கல் செய்தார்.

ஆனால், உறுப்பினராக இல்லாத பட்சத்தில் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய  சின்மயி, எந்த காரணமும் இல்லாமல் விளக்கமும் கொடுக்காமல் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியது ஏன்? வாழ்நாள் உறுப்பினர் அட்டை வைத்திருப்பதால் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நடசத்திரம் மரணமடைந்தார்
2. அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது -கொரோனா விழிப்புணர்வுப் பாடல்
அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது கொரோனா விழிப்புணர்வுப் பாடலில் இணைந்த வைரமுத்து எஸ்.பி. பால சுப்பிரமணியம்
3. எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர்களுக்கு நன்றி -ரஜினிகாந்த்
எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.
4. ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அவருக்கும் தெரியாது, இறைவனுக்கும் தெரியாது - நடிகர் வடிவேலு
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என்று நடிகர் வடிவேலு கிண்டலாக கூறியுள்ளார்.
5. கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு- ரஜினிகாந்த்
கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு என ரஜினிகாந்த் கூறினார்.