சினிமா செய்திகள்

படமாகும் மிதாலிராஜ் வாழ்க்கை: கிரிக்கெட் வீராங்கனையாக டாப்சி + "||" + Mithali Raj Life is become a film: Topsy as cricket player

படமாகும் மிதாலிராஜ் வாழ்க்கை: கிரிக்கெட் வீராங்கனையாக டாப்சி

படமாகும் மிதாலிராஜ் வாழ்க்கை: கிரிக்கெட் வீராங்கனையாக டாப்சி
விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையை படமாக்கும் போக்கு அதிகமாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி வாழ்க்கையை ‘எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற பெயரிலும் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்றை ‘சச்சின் பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரிலும் படமாக்கி வெளியிட்டனர். அந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது.
குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கையும் படமாக வந்தது. பேட்மிண்டன் வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஆகியோரின் வாழ்க்கையும் படமாகிறது. இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற சரித்திர நிகழ்வை மையமாக வைத்து 83 என்ற படம் தயாராகிறது. இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்து வருகிறார்கள்.

இந்த வரிசையில் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கையும் ‘சபாஷ் மிது’ என்ற பெயரில் படமாகிறது. மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி நடிக்கிறார். கிரிக்கெட் மட்டையுடன் மிதாலி ராஜூவாக மாறிய டாப்சியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. படக்குழுவினர் மற்றும் டாப்சிக்கு மிதாலிராஜ் நன்றி தெரிவித்துள்ளார். டாப்சி கூறும்போது, “இந்திய பெண்கள் கிரிக்கெட் விளையாட்டில் மிதாலி ராஜ் பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். அவரது வாழ்க்கை கதையில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது” என்றார்.