செல்பி எடுத்தவர் செல்போன் பறிப்பு; சல்மான்கானுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்


செல்பி எடுத்தவர் செல்போன் பறிப்பு; சல்மான்கானுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்
x
தினத்தந்தி 30 Jan 2020 11:15 PM GMT (Updated: 30 Jan 2020 7:28 PM GMT)

பொது விழாக்களிலும், விமான நிலையங்களிலும் நடிகர்- நடிகைகளுடன் ரசிகர்கள் செல்பி எடுக்க முண்டியடிப்பது வழக்கம். சிலர் சிரித்தபடி போஸ் கொடுப்பார்கள், இன்னும் சிலர் தொல்லையாக கருதுவார்கள். இந்த நிலையில் தன்னுடன் செல்பி எடுத்தவரின் செல்போனை சல்மான்கான் பறித்து சென்ற சம்பவம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

சல்மான்கான் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக கோவா சென்றார். அங்குள்ள விமான நிலையத்தில் இறங்கி காரில் ஏற சென்றபோது ஒரு ரசிகர் அவரோடு செல்பி எடுக்க முயன்றார். இதனால் கோபமடைந்த சல்மான்கான் அந்த ரசிகரின் செல்போனை தட்டிப் பறித்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சல்மான்கானின் இந்த செயலை பலரும் கண்டித்தனர். அகில இந்திய காங்கிரஸ் மாணவர் அணியை சேர்ந்த அஹ்ராஸ் முல்லா, கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்துக்கு எழுதி உள்ள கடிதத்தில், ரசிகரை அவமானப்படுத்திய சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற முரட்டுத்தனமான நடிகர்களை கோவாவுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா முன்னாள் எம்.பி நரேந்திர சாய்வாக்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ரசிகர் செல்பி எடுத்ததற்காக சல்மான்கான் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Next Story