சினிமா செய்திகள்

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ‘பொன்னியின் செல்வன்’முதல் பாகம் ரிலீஸ்? + "||" + Ponniyin selvan first part release in next year April Month?

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ‘பொன்னியின் செல்வன்’முதல் பாகம் ரிலீஸ்?

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ‘பொன்னியின் செல்வன்’முதல் பாகம் ரிலீஸ்?
‘பொன்னியின் செல்வன்’ நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இயக்குனர் மணிரத்னம் படமாக்கி வருகிறார். அனைத்து மொழி நடிகர், நடிகைகளையும் இதில் நடிக்க வைத்துள்ளார்.
ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர். சரத்குமார், ஜெயம் ரவி, பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் உள்ளனர். 

பழுவேட்டரையர் வேடத்தில் சரத்குமாரும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக படத்தை எடுக்கின்றனர். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தில் உள்ள காடுகளில் முடித்து விட்டு சென்னை திரும்பி உள்ளனர்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில் அரண்மனை அரங்குகள் அமைத்து வருகிறார்கள். சரித்திர காலத்து தோற்றத்துக்காக நடிகர்கள் நீண்ட தலைமுடியும், தாடியும் வளர்த்து நடித்து வருகிறார்கள். இதன் முதல் பாகத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன் முழு படமும் 5 மணி நேரம் ஓடக்கூடியது என்றும் முதல் பாகம் இரண்டரை மணிநேர காட்சிகளுடன் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் திரிஷா
இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி வருகிறார்.
2. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய்: 10 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய், 10 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார்.