சினிமா செய்திகள்

பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இயக்குனர் பேரரசு பா.ஜனதாவில் இணைந்தார் + "||" + The director joined Empire Pa Janata

பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இயக்குனர் பேரரசு பா.ஜனதாவில் இணைந்தார்

பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இயக்குனர் பேரரசு பா.ஜனதாவில் இணைந்தார்
விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, அஜித் நடித்த திருப்பதி உள்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் பேரரசு.
சென்னை, 

விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, அஜித் நடித்த திருப்பதி உள்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் பேரரசு. இவர் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு நேற்று வந்தார். அங்கு அவர் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை பா.ஜனதாவில் இணைத்து கொண்டார்.

இயக்குனர் பேரரசுக்கு கட்சி உறுப்பினர் அட்டையை பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கி, பிரதமர் நரேந்திரமோடியின் உன்னத திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றிட வாழ்த்தினார்.

பா.ஜனதாவில் இணைந்தது ஏன்? என்பது குறித்து பேரரசு பின்னர் கூறும்போது, ‘பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தேசப்பணி என்னை வியக்க வைக்கிறது. எனவே பா.ஜனதாவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை தெரிவித்தேன். அதன் அடிப்படையில் என்னை அந்த கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளேன்’ என்றார்.