சினிமா செய்திகள்

வெப் தொடரில் நடிக்கும் நமீதா + "||" + Namitha who plays in the web series

வெப் தொடரில் நடிக்கும் நமீதா

வெப் தொடரில் நடிக்கும் நமீதா
வெப் தொடரில் நடிகை நமீதா நடிக்க உள்ளார்.

சினிமாவை அடுத்து வெப் தொடர்கள் ரசிகர்களை ஆக்கிரமித்து வருகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க வருகிறார்கள். ஜெயலலிதாவின் வாழ்க்கை வெப் தொடராக வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால் நடித்துள்ளனர்.


சத்யராஜ், பிரசன்னா, பாபிசிம்ஹா, நித்யா மேனன், பிரியாமணி, மீனா, இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அர்ஜுன் ராம்பால், ஜாக்கி ஷெராப், அபிஷேக் பச்சன், நவாஜூதின் சித்திக், விவேக் ஓபராய், நடிகைகள் கியூமா குரோஷி, கியாரா அத்வானி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள்.

தமன்னாவும் வெப் தொடருக்கு வருகிறார். நடிகர் கதிர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் புதிய வெப் தொடரில் நடிக்க உள்ளனர். இந்த தொடரை புஷ்கர் காயத்ரி இயக்குகின்றனர்.

இந்த நிலையில் நடிகை நமீதாவும் வெப் தொடரில் நடிக்க உள்ளார். நமீதா ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ஏய், சாணக்யா, பம்பர கண்ணாலே, ஆணை, தகப்பன் சாமி, பில்லா, பாண்டி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்துக்கு பிறகு வெப் தொடருக்கு வருகிறார்.