சினிமா செய்திகள்

வைரலாகும் மஞ்சு வாரியர், நவ்யா நாயர் செல்பி + "||" + Actress Manchu Warrior, Navya Nair Selfie is Viral

வைரலாகும் மஞ்சு வாரியர், நவ்யா நாயர் செல்பி

வைரலாகும் மஞ்சு வாரியர், நவ்யா நாயர் செல்பி
நடிகைகள் மஞ்சு வாரியர் மற்றும் நவ்யா நாயர் எடுத்த செல்பி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை மஞ்சு வாரியருடன் இணைந்து நடிகை நவ்யா நாயர் செல்பி எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் கீழ், “உங்களை யார் சந்தோஷப்படுத்தினார்களோ அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மஞ்சுவாரியரும், நவ்யா நாயரும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செல்பியில் இரண்டு கதாநாயகிகளும் அழகாக இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சுவாரியர் ‘அசுரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.


தமிழில் அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நவ்யா நாயர் நடித்துள்ளார். 2010-ல் சந்தோஷ் மேனன் என்பவரை மணந்து சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவருக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நவ்யா நாயர் மீண்டும் மலையாள படத்தில் நடிக்க வந்துள்ளார். இந்த படத்துக்கு ‘ஒருத்தீ’ என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நடிகர் மம்முட்டியும், நடிகை மஞ்சுவாரியரும் வெளியிட்டனர்.